கடுப்பேறிய அவள் வார்த்தைகள், கலங்கி போன என் கண்கள், நடுநிசி நாய்களும் நாக்கு வறண்டு சுருண்டு விட்ட நேரம், விசும்பி விசும்பி நான் அழுததில் வரைந்த என் காதல் கோலம் கண்ணீர் பட்டு கரைந்து போனது..!!
நிகழ்காலமும் இறந்தகாலமாகிட, என் உயிரிருந்தும் இறந்தவனாகி, கிழிந்த இதய ஓட்டையை அவள் நினைவை கொண்டே பூசி மெழுகி, மீண்டும் பூப்பறிக்க செல்கிறேன் என் கல்லறையில் எனக்கு நானே மலர் தூவி மரியாதை செய்வதற்கு...!!!