www.gamblinginsider.ca
Showing posts with label கற்பனை கவிதைகள். Show all posts
Showing posts with label கற்பனை கவிதைகள். Show all posts

30 July 2016

மிஞ்சி இருப்பது... Mano Red


அந்த மிருகத்திடம் 
இன்றும் தோல்விதான்.
நாய் உறங்கி நரி உறங்கி
ஊர் உறங்கியும்
உறங்காத உள்ளத்திற்குள்
கூடுவிட்டுக் கூடு பாய
இருட்டுக்குள் தவழ்ந்து வந்தது.
அனுமதி கேட்காமல்
அதிரப் புகுந்து
மாயத்திரையால்
நிஜத்தை மறைத்து
யுத்தம் தொடங்கியது.
எல்லாம் முடிந்தும்
மிஞ்சி இருக்கும் தனிமையை
பந்தயப் பொருளாக்கி
அது ஆடிய சூதாட்டத்தில்
உயிரைப் பணயம் கேட்ட
அந்த வசியக் குரல் மட்டும்
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

22 January 2015

துன்பப் பனிக்காலம்…!!-Mano Red

அது ஒரு
துன்பப் பனிக்காலம்,
சொல்ல வேண்டியதாயினும்
சொல்ல முடியவில்லை…!!
பார்த்தவுடன் பயம் கொள்கிற
பாழடைந்த நேரம்..!!
மீள் சறுக்கலில்
சுழல் நினைவுகளுடன்,
மீட்சி பெற
முனைப்புடன்
வந்து அமர்கிறது
ஒரு அனாதை நினைவு…!!
அவிழா முடிச்சுகளுடன்
ஆங்காங்கே சில
மயிர் நுனி அளவு
பிரச்சினைகளின்
பிம்பங்களை
பெரிதாக தனதாக்கி
தடுமாறி நின்றது அந்நினைவு…!!
கோபுர அளவு
கோபங்கள் கொண்டு,
சினைமுட்டை அளவே
சந்தோசத்தின்
சலுகை பெற்றிருந்தது போல
பாவமாய் தெரிந்தது..!!
குளிருக்காக அல்ல
வேறு எதற்கோ
கூனிக்குறுகியது,
கதகதப்பிலும்
காந்தல் வெப்பமேறி
வெடித்து சிதற விரைந்தது..!!
தனிமையும் ஒரு காரணமாம்,
நூலாம்படையின்
நுண்ணிய வெளிச்சத்தில்
சிலந்தி கூட
அதன் துணையில்லையாம்,
வெறிக்கப் பார்த்துவிட்டு
வெறுமையாய் புலம்பியது…!!
அதற்கு என்ன தெரியும்..?
சுயமில்லாத
நினைவு சுவற்றில்
சுண்ணாம்பு பூசினாலும்,
கருப்பு நிறம் மட்டுமே
கனலாய் கசியும்..!!

07 December 2014

இரட்டை அர்த்தங்கள்..!!-Mano Red



இப்போது மட்டுமல்ல
எப்போதும்
இரட்டை அர்த்தங்களில்
முதல் அர்த்தத்தை
முந்திக் கொண்டு,
இரண்டாவது அர்த்தம் தான்
முதலில் யூகிக்கப் படுகிறது..!!

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு,
நனைத்து விட்டுப் போனது
நனைந்த இடம் மட்டுமல்ல
நனையாத இடமும் தான் ..!!

வாசல் வரை வரும் நிலா,
நள்ளிரவில் வீட்டிற்குள்
அழைப்பதை விட
விடாப்பிடியாய்
இழுப்பதையே விரும்புகிறது..!!

ஆசை இன்னும் வேகவில்லை,
கடைசியில் மிஞ்சிய
வெப்ப அளவு கூட
குளிர்ந்து விட்டது,
வெந்து விட்டதா என அறியாமலே
ஆசையும் தீர்ந்து விட்டது..!

இன்னும் அங்கு
செல்வதற்கான வழி
கிடைத்த பாடில்லை,
அதற்குள் தப்பிக்க வழியின்றி
அத்தனை வழிகளும்
வலியுடன் மூடப்படுகிறது..!!!

அதைப் பற்றிய ரகசியங்களை
எங்கே பேசுவது,?
எவ்வளவு பேசுவது,?
எப்படி பேசுவது.?
பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை,
பேசாமல் இருந்தாலும்
ரகசியம் காக்கப்படுவதில்லை..!!

என்னடா கொடுமையிது
அர்த்தமில்லாமல் இப்படி
இரண்டு ஒற்றை அர்த்தத்தில்
எழுத வேண்டியிருக்கிறது
இந்தக் கவிதையை...!!!

02 December 2014

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

குளிரில்
மனம் விட்டு பேச
ஆசை தான்..,
மனதை எங்கோ விட்டு விட்டு
யாரிடம் எதைப் பேச...!!

இழுத்து போர்த்தினாலும்
குளிர் வந்து
வம்புக்கு இழுக்கிறது,
கூடவே
மனம் போனால் பரவாயில்லை
மானமும் போகிறது ...!!

குளிரில்
கடிப்பதற்கு எதுவுமில்லை,
அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை,
பற்களுக்கு கடிக்க
பற்கள் இருக்கிறது..!!

முடிகள் பேசி
விடாமல்
முடிகளுடன்
முடிகள் பேசி
அமைதி கொள்கிறது குளிர்...!!

ஆமாம்
குளிருக்கு கொஞ்சம்
குளிர் விட்டுத் தான் போனது,
அனல் தெளிக்கும்
மூச்சைக் கக்கினாலும்,
அடங்க மறுக்கிறது..!

குளிரின் கதவுகளுக்கு
கூச்சம் ஏதுமில்லை,
கதகதப்பின் கள்ள சாவிக்கு
தூக்கத்தின் வாசலை
விலையின்றி
விற்பனை செய்கிறது..!!

எல்லா குளிர் காலமும்
ஏன் என்று
காரணமில்லாமல்
ஏக்கத்துடனே முடிகிறது,
தொல்லை தான்
இருந்தாலும்
மீண்டும் வர வேண்டும்..!!

24 July 2014

வாடகைக் கனவு...!(Mano Red)

கைவிடப்பட்ட
கனவு ஒன்று
என் சமீபத்திய நினைவுகளில்
காட்சியாக வருகிறது..!!

பச்சைப் பசேலென
பாசி படர்ந்த
நடை பாதையில் ,
அசட்டு சிரிப்புடன்
கடந்து செல்கிறது அந்த
கடந்த காலம்..!!

உலர்ந்து போகும்
முகத் திரைக்கும்,
வெளுத்துப் போகும்
தலை முடிக்கும்
முக்கால் பங்கு
இடைவெளியில் தான்
அந்த மூங்கில் நாட்கள் ..!!

ஆங்காங்கே
பாதரசம் உதிர்ந்த
முகம் தெரியாத
கண்ணாடி ஒன்று,
கடந்த காலத்தை தின்று
கர்வமாக ஏப்பம் விட்டிருந்தது..!!

ஜன்னல் ஓரமாக
காற்றில் ஆடியபடி
பறந்து வரும் இலை,
சருகாய் போகும் வரையுள்ள
கால அளவு தான்
விதியின் நாட்களுக்கும்....!!

புரியாமையின் இந்த
இருள் மூடிய இரவுகளை,
அந்த வாடகைக் கனவு
கண் திறந்து வைக்காமலே
மர்மங்களுடன்
நீண்டு சென்றது.........

01 July 2013

திருட்டு நிலாவும்,திருந்தாத சூரியனும்...!!!!

உனக்காக உயிர் நோக 
கடலோரம் நான் நின்ற நேரம், 
நிலவொன்று நிஜமாகி 
உன்னை தேடி வழி கேட்க, 
பொய் சொல்ல தெரியாமல் 
உன் முகவரி தந்து விட 

03 June 2013

கடவுளும்,காட்டு பங்களாவும்....!!!!

மனிதர்கள் கொடுக்கும் 
தொல்லை பொறுக்காமல், 
வானுலகம் வாழ வழியன்றி 
துன்பம் மறக்க ஓடி ஒளிந்து 
ஓய்வெடுக்க இடம் தேடிய 
எல்லாமறிந்த கடவுள், 
இறுதியில் பூலோகத்தின் 
காட்டு பங்களாவில் புகுந்தான்..!! 

15 May 2013

மெட்ராஸ் கவிஞன்...!!!(தில்லிருந்தா லவ்வுங்க)



நான் இன்னா சொல்ல வரேன்னு 
மனசுல நல்லா ஏத்திகோங்க பா..! 
அப்பால புரியும் இன்னாத்துக்கு 
இவன் இப்படி சொன்னான்னு...!! 

அப்புடி தான் ஒரு நாளு 
நல்ல சொக்கா போட்டுகினு, 
பாத்தவுடனே பிகுலு விடுற மாதிரி, 
இப்பிடிகா என் வூட்டாண்ட வழியா 
போனா அந்த செம பிகரு..!! 

10 May 2013

அறிவியல் வியக்கும் அழகி...!!!


மரபு சார்ந்த கோட்பாடுகளின் 
விதிகளை மீறியது நான் படைத்த 
அவளின் அழகு...!! 

இயற்கைக்கு ஒவ்வாத 
இலக்கணங்கள் பல கொண்டு 
இயற்றிய பௌதீக அழகி அவள்..!! 

03 May 2013

எழுதுகோல்(பேனா) காதலன்...!!!


பேனா..!! 
எழுதப்படிக்க தொடங்கிய போதே 
ஆறாம் விரலாய் முளைத்து விடும் 
உயிருள்ள தோழன்..!! 

பேனா..!! 
எழுத்துக்களையும் வரிகளையும் 
தின்று தின்று கொழுப்பில்லாமல் 
மெலிந்தே இருக்கும்.. 

29 March 2013

விமர்சனங்களின் போதைக்கு ஏங்கும் கவிஞன்..!!



எதிர்பார்ப்புகளின் ஏகப்பட்ட 
முகங்கள் மாறுவேடத்தில்...!!! 

ஆள் அரவமற்ற அத்துவான காட்டில் 
ஒரு நாள் பொங்கலுக்கு தவமிருக்கும் 
அய்யனார் சாமி...!! 

யாரும் வராத பொட்டல் பூமியில், 
தேநீர் கடை போட்டிருக்கும் 
யாரோ ஒருவன்..!! 

சோறூட்ட அம்மா வருவாள் 
என ஏங்கி தவிக்கும் 
அனாதை சிறுமி..!! 

இருளில் ஒற்றை பனை மர அடியில், 
தன்னை விலை பேச காத்திருக்கும் 
விலை மாது..!! 

எந்த கவலையுமின்றி 
பிணங்களின் வரவை நோக்கும் 
புதிய சுடுகாடு..!! 

குறை சொல்ல கூட ஆளில்லையே 
என கண்ணீர் சிந்தும், 
உருவமில்லா ஓவியம்.!! 

வரமாட்டார் என தெரிந்தும், 
வரவில்லையென புலம்பும் 
கடவுள் பக்தன்..!! 

ஒருநாளாவது யாரும் தன்னிடம் 
எதுவும் கேட்க கூடாதென நினைக்கும், 
அதிசய ஆண்டவன்..!! 

விளையாட யாருமின்றி துடிக்கும் 
இடித்தாலும் சிரித்து வந்த 
தெருமுனை உரல்..!! 

யாரும் அமரவில்லையென 
ஒற்றை காலில் நிற்கும், 
நிழலில்லா இருக்கைகள்..!! 

நன்றாக இல்லை என்ற போதும், 
விமர்சனங்களின் போதைக்கு ஏங்கும் 
ஒன்றுமறியா கவிஞன்..!!


27 February 2013

அந்த ஒருநாள் கடவுள்...!!!!


அன்றொரு நாள் கடவுள், 
தனை மறந்து கண் தூங்கிய நேரம், 
கனவில் சொர்க்கம் விட்டு 
பூமியெனும் நரகம் வந்தார்..!! 

பனிப்புல் தரையில் பாதம் பதித்து, 
மகரந்த பூக்களை முகர்ந்தவர்க்கு, 
மனித பூக்களின் வாசம் வித்தியாசமே..!! 

தன்னை தான் காண கோவில் புகுந்தார்..!! 
பசியுள்ள உயிர்கள் வாசலில் வாடுவதும், 
கோவில் உண்டியல் நிரம்பி வழிவதும், 
என்னவொரு விந்தையென சித்தம் குழம்பினார்..!! 

சொர்க்கத்தின் தடம் தெரியாமல், 
சாக்கடை வீதியில் நடந்ததில், 
அவருடன் சொர்க்கம் செல்ல தயாரானது, 
கொசுக்களும்,கொலைகார கிருமிகளும்,,!!! 

நாவில் தண்ணீர் படாமல் ஒருநாள் 
பூமி சுற்றிய அவருக்கு, 
நம் வாழ்நாள் பஞ்சத்தை புரியமுடியவில்லை..?? 

திரியில்லா விளக்கினை அதிசயமாய் அவர் தொட,
மின்சாரமோ அவருக்கு தான் யாரென்று காட்ட, 
அப்போது தெளிந்தார், 
அறிவியல் கடவுள் யாரென்று..!! 

அறிவியல் வளர்ச்சியில் மனிதர்கள், 
அதே நகை,உடைகளுடன் கடவுள்கள், 
மாற்றம் தராத மனிதர்களை நினைத்து, 
மனதிற்குள்ளே சிரித்து சென்றார்..!! 
அந்த ஒருநாள் கடவுள்...!!!


16 February 2013

பயமறியா கற்பனை குதிரைகள்....!!!


என் மூளையில் விளக்கெரிய 
தொடங்கிய நேரம், 
கையில் பேனாவும், 
பையில் காகிதமும் கொண்டு, 
யாருமில்லா காடு நோக்கி 
வீறு நடை போட்டேன்.. 

கவிதைக்கு தலைவன் தனிமை, 
என்று யாரோ சொல்ல கேட்டு 
வீடு விட்டு காடு சென்றேன்..!! 

காதலிக்க யாரும் இன்றி 
தவித்து நின்ற தனி மரம் கண்டு, 
என் கவிதை கடையை அங்கே விரித்து 
மரத்திற்கு ஆறுதல் தந்தேன்..!! 

முதல் வரி எழுத முனைந்த போது 
மரம் ஒரு இலை உதிர்த்தது..!! 
என்னை எழுத ஊக்குவிப்பதாய் 
நினைத்து கொண்டே எழுதினேன்.. 

சற்று நேரம் போகவே, 
இலை உதிர்வு அதிகமானது..??? 
நான் எழுத இலையும் உதிர்ந்தது.. 
நான் நிறுத்த மரமும் நிறுத்தியது..!! 

பயம் என்னை ஆட்கொள்ள, 
எழுந்து மெல்ல நடை போட்டு 
வேகமாய் வீடு வந்த பின் புரிந்தது..!! 
அது உதிர்த்தது இலையல்ல, 
எனக்காக எழுதி அனுப்பிய 
காதலின் கவி வரிகள் என்று..!! 

அப்போது தெளிந்தேன் 
என் கற்பனை குதிரைகள் 
இன்னும் கட்டவிழ்க்க படவில்லை என்று ...!!!

21 December 2012

சிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்.....


 ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் "அழகானது" என்பதாகும்.

 மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.

சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.

சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.

 சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.

 சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.

சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.

 புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.

 தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.

 உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.

 ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.

28 November 2012

சிவப்பு ...!!!!


இந்த வார்த்தையில் என்னவோ இருக்கிறது, 
வண்ணத்தில் தனிமையாகவும் 
சாலையில் அபாயமகவும் 
வறுமையின் முகவரியாகவும் 
புரட்சியின் அடையாளமாகவும் 
இன்பத்தில் விளக்காகவும் 
உனக்கு இத்தனை முகங்களா??