பில்லிங் செக்ஷன் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். முன்னால் நின்றிருந்த நாகரிக மங்கை ஒருத்தி நான்கைந்து மூளைகளையும், ஒரேயொரு விலா எலும்பையும் ஷாப்பிங் செய்திருந்தாள். ரத்தமில்லாத இரண்டு இதயத்தை மட்டும் ஷாப்பிங் செய்திருந்த என்னை முறைத்துப் பார்த்துவிட்டு பறக்கும் தட்டில் ஏறிப் போனாள். என் முறை வந்தது. இடுப்புக்குக் கீழ் சொருகி வைத்திருந்த கிரெடிட் கார்டுகளை வரிசையாக எடுத்து POS மெஷினில் திணித்தேன். ERROR என்று துப்பிக்கொண்டே இருந்தது. பொறுமை இழந்த மெஷின் சிவப்பு நிற ஒளிக் கண்ணீரை சிதற ஆரம்பித்தது. அத்தனை கார்டுகளும் லிமிட் தாண்டியிருந்தன என்று பின் மண்டையில் அடித்து ரோபோ ஒன்று சொன்னது. இன்னொரு அடியாள்ரோபோ வந்து இடுப்பில் கையை விட்டு ஒரு கிட்னியை எடுத்துக்கொண்டு பில் கொடுத்தது. எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த 256 வயதுக்காரன் அப்போதே கிட்னி, சிறுநீரகம் என எல்லாவற்றையும் உருவி பையின் உள்ளே மறைந்துக்கொண்டான். ஒருவழியாக 527ஆவது தீபாவளி பர்ச்சேஸ் முடித்து செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேறும்போது பில்லின் இறுதி வரியாக இருந்த ‘நன்றி மீண்டும் வருக’ எழுத்துகள் ஒளிர்ந்தன. மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.😎
12 October 2017
தீபாவளி பர்ச்சேஸ் - Mano Red

Subscribe to:
Posts (Atom)