தொலைந்து போன கடிதங்கள்...???
http://eluthu.com/kavithai/94506.html
அன்புள்ள என ஆரம்பித்து
நலம் நலமறிய ஆவல்...!!!
என மகனுக்கு கடிதம் எழுத தொடங்கும் போதே
இனமறியா சந்தோசம் தாயின் மனதில்..
நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்
உன் உடம்பை பார்த்துகொள்..
நல்லா சாப்பிடு,,
எங்கள பத்தி கவலை வேண்டாம்..
இந்த வருடம் நல்ல மழை
செடிகள் நல்லா வளர்ந்துருக்கு..
நீ அனுப்பிச்ச பணத்துல தான்
உரம் வாங்கி விதச்சோம்
ஆடு ஒரு குட்டி போட்டுள்ளது
உன் பெயர் தான் குட்டிக்கு வச்சுருக்கோம்
நல்லா வெள்ளையா அழகா இருக்கு.
நீ வரும் போது பெரிசாயிடும்..!!
இந்த வருடம் ஊர்ல திருவிழா,
மதுரை கரகாட்டம் வருது
உனக்கு புடிச்ச ரெகார்ட் டான்ஸ்
நிகழ்ச்சி கூட போடுறாங்க..!!
அப்புறம் பாப்பா இந்த வருடம்
பத்தாவது வகுப்புக்கு போறா,
புத்தகம் வாங்க அடுத்த முறை
சேர்த்து பணம் அனுப்பி விடு...
இப்படிக்கு உன்னை காணமல்
தினமும் வாடிக்கொண்டிருக்கும்
அம்மாவும்,அப்பாவும்..
இப்படி குலைந்து குலைந்து
கடிதம் எழுதிய காலம்
தொழில்நுட்ப வளர்ச்சியில்
தொலைந்து தொங்கி நிற்கிறது...
தபால் பெட்டியின் நினைவுகளை
அழிக்க வந்த நவீன கொலைகாரனாக,
"குறுந்தகவல்"மட்டும் விரல்களில்...???