www.gamblinginsider.ca

31 January 2013

ஏமாற மட்டுமே தெரிந்தவன்....!!!!


மார்பில் கைகூப்பி,
பார்ப்பவர்கள் காலில் விழுந்து,
வயது வித்தியாசமின்றி,
ஓட்டு வரம் கேட்ட மாமனிதர்களே...!!!

சாக்கடை வீதி என்றாலும்,
கொசு வாழும் குப்பம் ஆனாலும்,
சாலை இல்லாத தெருவானாலும்,
வரைபடத்தில் இல்லாத ஊரானாலும்,
தேடி வந்து உறுதி அளித்தீர்களே..!!!

இப்போது எங்கு சென்று
ஓடி மறைந்து போனீர்கள்...???

உலகிற்கு அண்ணமிட்ட நாங்கள்,
வானத்தை அன்னாந்து பார்க்கிறோம்..??
மழையாவது எங்களை பார்க்க வருமென்று..!!

உங்களை சொல்லி தவறுமில்லை,
பொல்லாத பணத்திற்கு ஆசை கொண்டு,
எங்களை நாங்களே அடகு வைத்து,
அடிமை பட்டுவிட்டு,
தலைகுனித்து தன்மானம் காக்க
போராடி கொண்டிருக்கிறோம்...!!

கோடி பணம் கொள்ளையடித்தாலும்,
இறுதியில் உங்களுக்கும்,
கோடித்துணி மட்டுமே மிச்சம்..!!!
புரிந்து கொண்டால் புண்ணியம்
உங்களுக்கு மட்டுமல்ல..???
ஒன்றுமில்லாத எங்களுக்கும்..!!

வாழ்க வாழ்க சொல்லிய எங்களை
வீழ்க வீழ்க என சொல்லவைத்து,
வாயிலும் வயிற்றிலும் அடித்து
மண் அள்ளி தூற்றி உங்களை 
இழிவு படுத்த எங்கள் மனம்
முன்வரவில்லை...!!!

நீங்கள் கரை வேட்டி கட்ட,
கறை படிந்த எங்களின்
வேட்டியை மாற்ற வேண்டாம்,
கிழிக்காமல் இருந்தாலே போதும்...!!!

இப்படிக்கு,
மனதில் பட்டதை
புலம்பி கொண்டிருக்கும்,
ஏமாற மட்டுமே தெரிந்தவன்....!!!!

30 January 2013

அ...ஆ(அவள் ஆளவந்தாள்)


தானாக கிடைத்த எதையும்,
வீணாக ஏற்காத என் மனது,

பாழாகிபோன உன் நினைவை,
உயிரினும் மேலாக எண்ணி,

வாடிய பயிர் போல வதைந்து
தேடிய உன் பிம்பங்களை,

கொடிய விஷமென எண்ண வைத்து
விடிய விடிய என்னை தூங்காமல் செய்து,

எங்கேயோ போய்கொண்டிருந்த என்னை
உன்னை நோக்கி ஆட்கொண்டாயே...!!
என்னை ஆளவந்தவளே...???

22 January 2013

வஞ்ச புகழ்ச்சி அணியாய் காதல்...!!!


என்னை அவள்
உயிரென்றும்,
உயிரில் பாதி என்றும்,
நானின்றி அவளில்லை என்றும்,
மூச்சிற்கு முன்னூறு முறை
கூறியது ஒரு காலம்...!!!

என்னை துறந்துவிட்டு,
முழுவதும் மறந்துவிட்டு,
என்னுயிருடன் பறந்துவிட்டு,
கூறுகிறாள் நீ யாரென்று...???

மனமுடைந்து அன்று முதல்
அவளை சபிக்க ஆரம்பித்தேன்
இப்படியாக,,

பூக்கள் பறிக்கப்படுமுன்
அவளின் கூந்தல் ஏறவும்,

நிலா விடியும்வரை
அவளுக்கு மட்டும் தெரியவும்,

வானவில் இன்னும் வண்ணங்களை
அவளுக்கு காண்பிக்கவும்,

சாப்பிடாத போது மட்டுமே விக்கல்
அவளை தீண்டவும்,

அறைத்த மருதாணி
அவளின்றி சிவக்கவும்,

கவிதை எழுத துணிந்தால்
அவள் கற்பனையின்றி தவிக்கவும்,

இப்படியாக என்னை விட்டால்,
அவளை சபிக்க மறந்து,
என் வஞ்சம் தீர்க்க
புகழ்ந்துகொண்டிருப்பேன்
அவளின் உயிராக இருந்து..!!!!

18 January 2013

ஆவிகளுடன் நான் பேசினேன்....!!!!


ஆவிகளுடன் நான் பேச
ஆரம்பித்துவிட்டேன்,
ஆவி பறக்க
அவளுடன் தேநீர் அருந்திய
அந்த நாளில் இருந்து...!!!

நரகம் என்னை
ஒதுக்கிவிட்டது,
எனை மறந்து
அவளுடன் பழகிய
அந்த சொர்க்க நாளில் இருந்து..!!

அழுகை எனக்கு
புளித்து போனது,
உள்ளம் குளிர
அவளுடன் சிரித்து பேசிய
அந்த நொடியில் இருந்து....!!!

இப்படியாக
என்னை மாற்ற
அவள் மாறினாள்...!!!!
அவளுக்காக நான்
என்னையே மாற்றினேன்...!!

பொல்லாத காதல்...!!!!


அவள் என்பெயரை மட்டுமே
உச்சரிக்க வேண்டுமென,
அவளை நச்சரித்த
என் நாட்கள் எல்லாம்,
என்னை இப்போது
எச்சரிக்க துணிந்துவிட்டன..!!

அவளுடன் நனைந்த என் மழையும்,
அவளுடன் இணைந்த என் இதயமும்,
அவளுடன் பிணைந்த என் காதலும்,
எதிர்வினையாக மாறி
என்னை வெல்ல..!!!

விட்டுகொடுத்தவன் போல
நான் என்னை விற்றுவிட்டேன்
அந்த பொல்லாத காதலுக்கு...!!!

கனவு நாடகம்..!!!


அவளை பார்த்து
கவிதைகளே வாய்மூடி
நிற்கும் போது,
நான் மட்டும்
அவளை பற்றி கவிதையாக
எப்படி சொல்வது...???
என சொல்லி கொண்டிருக்கும் போதே,

என் உதடு அவளை பற்றி
பொய் சொல்ல துடிக்க,
என் கண்கள் அவளிடம்
விளையாடி முடிக்க,
நான் ஒன்றுமறியாதவன் போல்
தெரியாமல் நடிக்க..!!!

நான் விரும்பிய நிஜ நாடகம்,
கனவில் மட்டும்
கை கோர்த்து
நிழலாக மறைந்துவிட்டது...!!

சாட்சி...????


எனக்கும் என் தொலைபேசிக்கும் 
இடையே காதல் வளர்ந்ததற்கு, 
அவளுக்கு இடைவெளியின்றி 
நான் அனுப்பிய குருந்தகவல்களே 
உண்மையான சாட்சி....!!!!

11 January 2013

நம்பினால் நம்புங்கள்...!!!


http://eluthu.com/kavithai/100889.html

இருக்கும் போது யாருக்கும் 
தெரியாத அவனே, 
இறந்த பின் தெய்வமாகிறான்...!! 

நமக்கு மிகவும் பிடித்த ஒன்று, 
கிடைக்காத போது 
பிடிக்காத ஒன்றாகி விடுகிறது...!! 

அருவெறுப்பான கவர்ச்சி படத்தை 
மகனும்,தந்தையும் 
ஒரே கோணத்திலே ரசிக்கின்றனர்...!! 

கொலை செய்து சிறை சென்றவன் 
திரும்பி வந்ததும், 
மாபெரும் தலைவனாகிறான்....!!! 

கொடியவன் என சித்தரிக்கப்பட்ட இராவணன் 
கதை நாயகன் ஆனால், 
நல்லவன் ஆகி விடுகிறான்..!! 

ஊர் கூடி செய்து வைத்த திருமணமே 
நன்றாக வாழாத போது, 
ஊர் கூடி சிரித்து பிரிக்கபடுகிறது...!! 

நாம் பார்த்து ரசித்த நடிகர்,நடிகைகள் 
போலவே வாழ ஆசைப்பட்டு, 
ஒருநாள் வாழ்ந்து மறக்கிறோம்...!! 

அவசர உலகில் அறிவை இழந்து, 
காட்சி பொருளை அதிசயம் என நம்பி 
கண்ணிருந்தும் யானை தடவி பார்க்கிறோம்..!! 

நம்பினால் நம்புங்கள், 
உண்மையல்லாத ஒன்றே உயிராகிறது, 
நம் உணர்ச்சிகளின் உச்சகட்டமே 
ஏமாற்றங்களின் பிறப்பிடமாகிறது..!!!

10 January 2013

உனக்கும் எனக்கும்...!!!!


உன்னை பற்றி கேட்டால்
நிமிடத்தில் சொல்லிவிடலாம்,
ஆனால்
உன்னுடன் வாழ்ந்த என் நிமிடங்களை
கேட்டால் என்ன நான் செய்வது..!!

நானும் ஒரு திருடன் தான்,
உனக்கு தெரியாமல்
உன்னை காதலித்த
அந்த நிமிடங்களில் மட்டும்...

உன் பெயரை சொல்லி பின்,
தீ என்று சொன்னால்
அந்த வார்த்தை கூட என்னை
சுடுவதாய் உணருகிறேன்...!!!

இப்படி உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமல்,
கழிந்த என் நாட்கள் மட்டும்
என் வாழ்க்கையின் ஒருபாதியில்
தனியாய் நிற்கின்றது...!!!

04 January 2013

உழவின்றி உலகில்லை..!!!

எங்கெங்கு காணினும் உழவு என்றொரு காலம்,
செங்குருதி வியர்வை சிந்தி ஏர் உழவு செய்து
உலகை சுழல வைத்தவன்
உழவன் எனும் தன்னலமற்ற இறைவன்..!!

பயிர்த்தொழில் மட்டுமே உயிர்தொழில்,
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு என
உயிரை உரமாக்கி உழவு செய்தவன் உழவன்..!!

ஆடிப்பட்டம் தேடி விதைத்து,
ஆவணியில் முளைப்பு பார்த்து,
எப்போதும் முப்போகம் தந்த பூமித்தாய்க்கு
உழவும்,உழவனும் செல்லபிள்ளைகளே..!!

வெண்கொற்றகுடை அரசனும்,
தங்க ஆடை தரித்த செல்வந்தனும்,
வீடு,பேறு என முற்றும் துறந்தவனும்,
உழவனின் உழவாட்சிக்கு அடிமையே..!!!

ஏரை நம்பி ஏட்டறிவை விட்டதாலோ என்னவோ,
தன் வியர்வையில் அறுவடை செய்து,
உயிரை கூறிட்டு உலகிற்கு சோறு போடுகிறான்..!!

அந்நியனுக்கு அடகு வைக்கப்படும் மனித அறிவு,
உழவனின் வியர்வைக்கும்,உழவுக்கும்
என்றுமே மண்டி இடும்..!!

உழவனின்றி அழகிய உழவில்லை,
உழவின்றி புதிய உலகில்லை..!!!

03 January 2013

நான் மகான் அல்ல(BAD BOY)




நீ எங்கேயோ பிறந்து 
வளர்ந்ததில் தவறில்லை, 
ஆனால் என்னை 
சந்திக்காமல் இருந்தது தான் தவறு..!! 

என்னை சந்திக்காமல் 
இருந்தது தவறில்லை, 
என்னை பற்றி தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டது தான் தவறு..!! 

நீ என்னை பற்றி தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டதில் தவறில்லை,, 
அதை என்னிடம் கேட்காமல் 
என் நண்பனிடம் கேட்டது தான் தவறு..!! 

என் நண்பனிடம் என்னைப்பற்றி 
கேட்டது தவறில்லை, 
ஆனால் அவன் வார்த்தைகளை 
முழுவதும் நம்பியது தவறு..!!! 

நீ நம்பியதில் என்றுமே 
தவறில்லை, 
என்னை மகான் என 
நினைத்தது தான் தவறு..!!! 

இப்போதல்ல எப்போதுமே 
நான் மகான் அல்ல...!!