நமக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து தரும் அப்பாவுக்குள் தான் எத்தனை கதாபத்திரங்கள்...!!
தலையில் எண்ணையிட்டு வழித்து சீவி, கண்ணாடியை முறைத்து பார்த்து, மீசை முறுக்கி நடக்கும் போது, அப்பா- கதாநாயகன்..!! அதிகம் பேசாமல் பார்வை மட்டும் காட்டி நாக்கை மடக்கி அடிக்க தெரியாதது போல் தவறுகளுக்கு தண்டிக்கும் போது அப்பா- அழகிய வில்லன்..!!
அவ்வளவு பெரிதாக இல்லை என்றாலும் தன்னால் முடிந்த வரை ஏதோ சொல்லி, பல் தெரியாமல் சிரிக்கும் போது அப்பா- நகைச்சுவை நடிகன்..!!
அனுபவங்களின் முழு உருவமாகி எதற்கும் கலங்காத நெஞ்சமானாலும், நமக்கென துன்பம் வரும் போது அப்பா- குணச்சித்திர நடிகன்.!!
தன் வயதை மறைத்து விட்டு தனக்கும் வயதை இருபதாக்கி நம் பாதைக்கு தோள் கொடுக்கும் போது அப்பா- துணை நடிகன்..!!
வயது அதிகமாகும் நிலையில் நம்முடன் பேச்சை மட்டும் குறைத்து பாசம் அதிகம் வைத்து நிற்கும் போது அப்பா- உச்ச நடிகன்..!!
எத்தனை பேர் வந்து சென்றாலும் நாம் எப்போதும் திரும்பி பார்த்து காதலிக்கும் ஒரே கதாநாயகன் அப்பா...!!!