நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்தால், நாம் ஏன் நினைக்க வேண்டும்...?? நம்மை படைப்பது அவனென்றாலும் அவன் நினைத்தவாறே நாம் நடப்பதற்கு அவன் படைப்பில் அர்த்தமில்லை..?? பொறுமை கடலினும் பெரிது என்றால் கடல் வற்றிவிடும் வரை பொறுத்தாயிற்று, ஏன் பொறுத்தோம், எதற்காக பொறுத்தோம், என்று இறுதிவரை தெரியவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் இல்லை..???
அதிர்ஷ்டம் வந்தால் கூரையை கிழித்து கொண்டு கொட்டுமாம்..!! இருப்பதற்கே இடம் இல்லை இதில் எங்கே போய் கூரையை தேடுவது..?? ஒருவேளை கூரை இருந்தால் தான் அதிர்ஷ்டம் கொட்டுமோ..??
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்றால், பலனின்றி கடமை செய்ய முழு மனமும் வராது ஒருவேளை வந்தால் நடிப்பில் தான் வரும்..!! பலன் என்பது பணம் மட்டுமல்ல நன்றி எனும் வார்த்தையில் கூட இருக்கலாமே..!!
நாம் எதிர்பார்த்த எல்லாம் கிடைத்து விடாது, அப்படி கிடைத்து விட்டால் எதிர்பார்ப்பு இருக்காது..!! நீங்கள் இதை படிக்க வேண்டாம் என எதிர்பார்த்தேன், நீங்கள் படித்ததில் ஏமாற்றமே எனக்கு மிச்சம்..!!