பேருந்து நிலையங்களில் பேருந்து இருக்கிறதோ இல்லையோ, பிச்சை எடுப்பவன் இருக்கிறான்..!! அவனை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை, இழிவு வரக்கூடாது என்பதற்காகவே சொல்கிறேன்..!! பிச்சை எடுக்க வைப்பது விதியின் செயல் எனில், அந்த விதியே பிச்சை கேட்பவனுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவியும் செய்ய சொல்லலாமே..??
பல சீர்திருத்தவாதிகள் மேடையிட்டு பேசுவார்கள், தன்னை பார்த்து பிச்சைக்காரன் வந்தால் தலை தெறித்து ஓடுவார்கள்..!! காரணம் கேட்டால் பொதுவாழ்க்கை வேறு இவ்வாழ்க்கை வேறு என்பார்கள்..!!
பிச்சைக்காரன் பிச்சை கேட்டால் எப்போதும் ஒலிக்காத தொலைபேசியும் பொய்யாக அழைக்கும், பணம் இல்லாத சட்டைப்பையில் பணமும் தேட வைக்கும், ஞானி போல அருகில் அழைத்து பிச்சை எடுக்காதே உழைத்து உண் என அறிவுரை கூட சொல்ல சொல்லும்..!!
உதவ முடியவில்லை எனில் சொல்லிவிடு, அலைய வைப்பதில் பயனில்லை..!! அவர்களின் பசிக்கு நீ தரும் ஏமாற்றம் உணவாக போவதில்லை என்பது தான் வருத்தமே..!!