அழகி உன்னை பார்த்து ஈர்க்கப்பட்டதால் என்னவோ வேறு பெண்களை பார்க்க துணிவின்றி கண்களை மூடி நடக்கிறேன்..!!! நிலவில் உன் அழகு பிரதிபலிப்பதாய் எண்ணி தினம் இரவில் தூக்கமின்றி நிலவை நோக்கி நடந்து நடந்தே என்னழகு கூடி விட்டது..!!
யாரோ சொன்னார்கள் நீ உண்மை மட்டுமே பேசுவாய் என்று..!! அவர்களுக்கு எப்படி தெரியும் நீ சொல்லும் பொய்கள் எனக்கு மட்டுமே கேட்கிறதே...!!
கண்மூடித்தனமாய் காதல் கொண்டால் மூளையில் விளக்கெரியும் என எனக்கு தெரியாது..!! கண்ணாடி பார்த்து என்னுடன் நானே பேசிய போது தெரிந்து கொண்டேன்..!!
எப்போது நீ வருவாயென, தகவல் ஏதுமின்றி காத்திருப்பதால் நான் பார்த்து வளர்ந்து ஓடும் கடிகாரம் கூட வெறுத்து சொல்லியது என்னை போல் கிறுக்கன் யாருமில்லையாம்..!!
எது எப்படியோ போகட்டும், எப்படி இருந்த நான் இப்படி ஆகி போனது உன்னால் மட்டுமே..!!