www.gamblinginsider.ca

04 July 2013

தான் அழகி என்ற "திமிரு" அவளுக்கு...!!

"அய்யோ" என 
அவளின் அழகை பார்த்தவுடன் 
சொல்ல தோன்றும்..!! 

எத்தனை திமிரு அவளுக்கு 
இருக்க வேண்டும்..!! 
எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது 
ஆனால் அவளின் அழகுக்கு 
எல்லையே இல்லை என்பது 
அவளின் அறிவில்லா மூடநம்பிக்கை..!! 

சர்வாதிகாரம் செய்கிறாள் அவள், 
அழகென்னும் ஒற்றை ஆயுதம் கொண்டு 
அத்தனையும் வென்று விடலாம் 
என றெக்கை கட்டி பறக்கிறாள்..!! 
நான் தலையில் அடித்து கொண்டேன்..!! 

கண்மூடித்தனமாய் நம்புகிறாள் அவள், 
கட்டை விரலை வைத்து 
உலகிற்கே தன் அழகை 
விளம்பரம் செய்ய முடியும் 
என கனவில் மிதக்கிறாள்..!!! 
நான் எனக்குள் சிரித்து கொண்டேன்..!! 

எங்கிருந்து வந்ததோ அவளுக்கு 
இவ்வளவு தைரியம், 
வீணாக போட்டிக்கு அழைக்கிறாள், 
அழகில் சிறந்தது நீயா இல்லை நானா 
என்று கண்ணாடியிடம் சண்டையிடுகிறாள்..!! 
நான் அங்கிருந்து ஓடி விட்டேன்..!! 

மிகச் சரியான கிறுக்கி அவள்..!! 
அழகை கொண்டு எல்லாவற்றையும் 
அடிமையாக்க பார்க்கிறாள், 
அழகினால் வந்த ஆணவமும்,திமிரும் 
நிலைக்க போவதில்லை என்பதே 
அவளுக்கு புரியாத போது 
அவளை கிறுக்கி மட்டுமல்ல, 
அழகு பேய் என சொன்னாலும் தவறில்லை..!!