www.gamblinginsider.ca

03 August 2013

வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!

வாலிப வயதில் இளமை நாணேற்றும், 
முட்டாள் மூளையின் தூண்டல் 
நெருப்பையும் அள்ள வைக்கும், 
நினைப்பவை எல்லாம் 
நிகழ்த்த துடிக்கும், 
நிகழ கூடாத எல்லாம் 
நினைக்கவும் வைக்கும், 
இத்தனை இருந்தும் வாலிபம் 
அர்த்தமில்லா கேள்விகுறி தான்..?? 

இளமைக்கு முதல் எதிரி 
அறிவுரை கூறும் வெள்ளை முடி தான், 
எவன் என்ன சொன்னாலும் 
எதிர்க்க தூண்டும் மின்சார வயது..!!! 

வயது செய்யும் சேட்டைக்கு 
வருடம் பல காவு கொள்ளும், 
இழுத்து பிடித்து கடிவாளம் போட்டால் 
இருப்பதையும் இழந்து நிற்கும்..!! 

எத்தனை தகறாரு செய்தாலும் 
அடி வயிற்றில் நெருப்பை சுமந்தே 
ஊர் சுற்றுகிறது வாலிபம்...!! 

அழுக்கு படியாத சட்டை அணிந்து 
கல்லூரி சென்றவர்களுக்கு, 
அழுக்கு படிந்து வேலை தேட பயம்..!! 

எவன் முன்னேற்றத்தையும் 
எளிதில் ஏற்று கொள்ள முடியாமல் 
ஒப்பிட்டு பார்க்கும் குணம்..!! 

தன்னை தானே திட்டி தாழ்த்தி 
சின்ன சின்ன குறைகளை 
ஊதி பெரிதாக்கும் மனம்..!! 

வாலிபமும் இனிக்கும் 
நல்ல வழிகாட்டி கிடைத்தால்..!! 
வருத்தப்படாதது போல் 
உலகிற்கு நடித்தாலும் 
உள்ளுக்குள் வருத்தம் வளர்த்தே 
வலம் வருகிறது 
இக்காலத்து வாலிபர் சங்கம்...!!!