வேலை தேடும் படலம்...!!!
வேலை வேலை வேலை
வேலை தேடுவதே ஒரு வேலை...!!
வேலை தேடி
நான் அலைஞ்ச
நாட்களெல்லாம்
நாசமாக போய்விடுமோ...??
எவனிடம் வேலை கேட்டாலும்
எதிர்த்து பேசுகிறான்,
பணிந்து பேசினாலும்
மிதித்து தள்ளுகிறான்..!!
முன் அனுபவத்திற்கு
முன்னுரிமை என
முழங்கிய அவர்கள் தான்
முன் அனுபவம் தர மறுக்கின்றனர்..!!!
வேலை தேடலில் தான்
வாழ்க்கை தத்துவம்
விளக்கத்துடன்
விவரிக்கப் படுகிறது..!!
விதியை நம்பாதவனைக் கூட
எல்லாம் "என் தலை விதி" என
புலம்ப வைத்து
புன்னகை செய்கிறது வேலையின்மை...!!
வெட்டியாக ஊர் சுற்றிய
அனுபவம் தான்,
வேலை வெட்டி தேடும் போது
வியர்வை துடைக்க உதவுகிறது...!!
வேலை தேடலில்
விவரம் தெளிந்தேன்..!!
எல்லா கெட்ட சகுனங்களும்
எமக்கே நடந்து விடுவதாய்
ஒரு விவரம் கெட்ட ஞானம்..!!!
தோல்விகள் முதலில்
சோகம் தந்தாலும்,
போகப் போக இதுவும் ஒரு
போதை தரும் மகிழ்ச்சியே..!!!
சொன்னால் சிரிப்பு வருகிறது..!!
பழைய வசனமே இது,
எது எப்படியோ
எனக்கும் வேலை தர
எவனோ ஒருவன் பிறந்திருப்பான்..!!
வீணாகப் போய்விடாமலிருக்க
வேலை தேடியது அந்தக் காலம்,
வேலை தேடியே
வீணாய்ப் போகிறது இந்தக் காலம்...!!