அன்றாடங் காய்ச்சிகளின் அடிவயிற்றில் அடித்து அகமகிழ்ச்சி அடையும் அரைகுறை பாடம் கற்ற அரசியல்வாதிகளே..!! என் மக்கள் எவ்வளவு அடித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என எப்படி கண்டுகொண்டீர்கள்..??
ஒற்றைத் தாளை காட்டி ஓட்டு வாங்க தெரிந்த உங்களுக்கு ஓட்டை விழுந்த எங்களின் ஓலை குடிசை தெரியவில்லையா..??
கரை வேட்டி நீங்கள் கட்ட கறை வேட்டியில் நாங்கள் அலைகிறோம், மாட மாளிகையில் நீங்கள் குடியேற மாடாய் நாங்கள் உழைக்கிறோம் ..!!
கடந்து போன காலச்சுவடுகளை திருப்பினால் காத்திருந்த மக்களுக்கு காதில் பூ மட்டுமே மிச்சம்..!!
துப்பில்லாத தலைவர்கள் துவண்ட மக்கள் மீது அடித்த துருபிடித்த ஆணிகளை துவம்சம் செய்ய காத்திருக்கிறோம்..!!
அய்யா அரசியல்வாதிகளே நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம், எது தேவையான ஆணி எது தேவையில்லாத ஆணி என்பது எங்களுக்குத் தெரியும் நாங்களே புடுங்கிக் கொள்கிறோம்..!!