www.gamblinginsider.ca

29 July 2014

வஞ்சக வலை வீசுகிறாள்...!(Mano Red)

பொய்யாக
நிலவொன்று செய்து
என் வானில்
உறவாட வைத்து
நிழலாக மழை பெய்கிறாள்..!!

பூப்போல
புயலொன்று வீசி,
கண்முன்னே
குயிலாக பேசி
நாடக நடை போடுகிறாள்...!!

கண்ணாடி
அறையொன்றில் பூட்டி,
என்னுருவம்
இல்லாமல் வாட்டி
கண்கட்டி வித்தை காட்டுகிறாள்..!!

பனிப்போல
சில்லென்று சிரித்து
வெயிலுக்கு
வர சொல்லி அழைத்து
உணர்வுக்குள் தீயிடுகிறாள்...!!

கண்ணுக்குள்
கடையொன்று நடத்தி
கண்ணீரை
வியாபாரம் செய்து
வட்டிக்கு விலை பேசுகிறாள்..!!

வஞ்சத்தில்
வலையொன்று விரித்து,
நெஞ்சக
அறையெல்லாம் உடைத்து
கை வீசி செல்கிறாள்,
காதல் பொய் பேசி ஓடுகிறாள்..!!