திட்டுதல் என்பது...
-
(எங்க ஊர்ப்பக்கம் 'வைதல்') திட்டுவதற்கான சொற்கள் நிறைய உண்டு. அது நேரம், காலத்திற்கு ஏற்றபடி மாறும். மகிழ்ச்சியில் திட்டும்போது மகிழ்ச்சியையும் கோவத்தில் திட்டும்போது சோகத்தையும் தரும். அது சொல்லையும், சொல்லும் கணம் மற்றும் கனத்தையும் பொருத்து அமையும். திட்டிப் பேசலாம்; திட்டிக் கொஞ்சலாம்; திட்டி அதிகாரம் செய்யலாம்; திட்டி வேலை வாங்கலாம்; திட்டி பாசத்தைக் கொட்டலாம்; திட்டி வெறுக்கலாம்; இப்படி எல்லாவற்றுடனும் திட்டுதலைப் பொருத்திக் கொள்ள முடியும். பிறருடனான நெருக்கத்தைக் கூட்டிக் காட்ட கொஞ்சல் வார்த்தைகளை விட திட்டுதலுக்கு போதை அதிகம். திட்டுவதற்கு சொற்கள் முக்கியம்தான். சாதாரண சொல்லையும் முக பாவனையில் அசிங்கமாக மாற்ற முடியும். திட்டிய வார்த்தைகளை வைத்தே சமாதானம் செய்ய முடியும்; திட்டியே உயிரை எடுக்க முடியும்; திட்டியே காதலிக்கவும் முடியும்; குறை கூறுவதையும் திட்டுதலாக்க முடியும். அம்மா செய்யும் உணவின் குறைகளைத் திட்டியபடியே வயிறு புடைக்கச் சாப்பிடவும் முடியும். இப்படித்தான் பல சமயங்களில் பலருக்கு திட்டுதல் தேவைப்படும். அதில், பலருடைய திட்டுதலுக்குப் பின்னால் பாசமும் உரிமையில் வரும் கோவமும் இருக்கும். மாறாக, பிறர் நம்மைத் திட்டியதுதான் மனம் வருத்தம் தரும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் திட்டாமல் நயமாகப் பேசி நல்ல சொற்களை வைத்தே நம்மை உயிருடன் கொல்லும் பலபேர் நம்முடன் தினமும் உறவாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 😶😶

Facebook (29.1.17)