😁
சென்னை பேருந்துகளில் வார நாட்களில் பயணம் செய்ய காலை அகட்டி நிற்கும் கண்டக்டரை விட முக்கியமான சில ட்ரெயினிங்குகள் நமக்குத் தேவைப்படும்.
* கூட்டத்துல எவனா(ளா)ச்சும் கால மிதிக்கும்போது 'ஐயோ அம்மா'ன்னு கத்தாம கடந்து போகணும்.
* யாரா இருந்தாலும் மிதிச்சு மேல ஏறணும்.
* துருப்பிடிச்ச கறை சட்டை, கையில ஒட்டினாலும் துடைச்சிட்டு போயிட்டே இருக்கணும்.
* நிக்கிறதுக்கே இடமில்லன்னாலும் இடிக்காம நிக்கோணும்.
* இன்னும் பலான விஷயங்கள்...
* கூட்டத்துல எவனா(ளா)ச்சும் கால மிதிக்கும்போது 'ஐயோ அம்மா'ன்னு கத்தாம கடந்து போகணும்.
* யாரா இருந்தாலும் மிதிச்சு மேல ஏறணும்.
* துருப்பிடிச்ச கறை சட்டை, கையில ஒட்டினாலும் துடைச்சிட்டு போயிட்டே இருக்கணும்.
* நிக்கிறதுக்கே இடமில்லன்னாலும் இடிக்காம நிக்கோணும்.
* இன்னும் பலான விஷயங்கள்...
இதுல இருக்குற நுணுக்கமெல்லாம் போகப் போக பழகிடும். ஏன்னா 45பேர் போக வேண்டிய பஸ்ல 60, 70, 75ன்னு கூட்டம் ஏறிட்டே போகும்போது பழகித்தான் ஆகணும். எவ்ளோ கூட்டம் ஏறுனாலும் கண்டக்டரும் ட்ரைவரும் பாடுற ஒரே டூயட் 'ஏறி வாயா, ஏறி வாயா'. பஸ்ஸுக்கு நடுவுல அண்டர்கிரவுண்ட் சீட் இருக்கிற மாதிரி நடுவுல வந்து நிக்கச் சொல்லுவாங்க. 'சார் இதுக்கு மேல உங்க தலை மேலதான் ஏறி நிக்கணும்'னு சொல்லத் தோணும்போது விசில் அடிச்சிடுவாரு.
இதுல இன்னொரு கொடும என்னன்னா ஒரு பேக்கோட ஏறிட்டோம்னா செத்தோம். பேக்ல ஒரு வாழைப்பழத்த வச்சு ஏறுனா கீழ இறங்கும்போது பஞ்சாமிர்தம் மினிமம் கேரண்டி. 'ஏம்ப்பா பேக்க கழட்டி யார்கிட்டயாவது கொடுப்பா'ன்னு ஒரு அங்கிள் சவுண்டு கொடுப்பாரு. என்னமோ அவரோட குடும்ப பாரத்தை நாம சுமக்கிற மாதிரி அவருக்கு ஆதங்கம். சென்னைக்குப் புதுசா வர்றவங்க பேக்க கழட்டி யாரு கிட்டயும் கொடுக்க மாட்டாங்க. காரணம் நம்மாளுக முழி அப்படி. எத்தனை படம் பாத்துருக்கோம் அவ்ளோ கூட்டத்துலயும் பேக்க அடிச்சிட்டு போறத. இல்லன்னா ஜன்னல் வழியே வெளிய எறிஞ்சு, பின்னாடி பைக்ல வர்றவன் அவன் கூட்டாளியா இருந்து பேக்க அடிச்சிட்டு போற மாதிரிலாம் கற்பனை கரை புரளும். அப்படி அந்த பேக்ல என்னதான் இருக்கும்னு பாத்தா 'வெறும் பேக்'தாங்க இருக்கும்.
நம்ம சுமைய அடுத்தவங்ககிட்ட கொடுத்து ஏன் கஷ்டப்படுத்தணும்னு ரெண்டு கால் இடுக்குலயும் வச்சு கம்பியப் புடிச்சு நிக்கிற உத்தி (நம்ம கண்டுபிடிப்பு) ஓரளவுக்கு தொல்லை இல்லாதது. அதுலயும் ஒரு சிக்கல் வரும், அவசரமா இறங்கப் போறவன் நம்ம பேக்ல கால வுட்டு இழுத்துட்டுப் போவான். 'அடேய்... சோதிக்காதீங்கடா'ன்னு எத்தன தடவ மனசுக்குள்ள சொன்னாலும் வெளிய கேக்காது.
இதுல டிக்கெட் எடுக்கும் படலம் பெரிய அக்கப்போரா இருக்கும். 'பாஸ் பண்ணு... பாஸ் பண்ணு'னு கண்டக்டர் கத்த, பதட்டத்துல நாமளும் நீட்ட, யாருகிட்ட பணத்த கொடுத்தோம்னு தெரியாம முழிக்க, 5ரூபா டிக்கெட்டுக்கு பதிலா 9ரூ டிக்கெட்டும் 1ரூபா மிச்சத்தையும் கையில திணிப்பாங்க. டிக்கெட் கிடைச்சதே பெருசு நம்ம ஸ்டாப் வந்திருச்சானு ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா 'வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதய்யா' பாட்டு பாடுற அளவுக்கு பஸ் நடந்துபோகும்.
ஸ்லோவா போறதுல ரொம்ப நேரமானாலும் அதுல ஒரு சந்தோஷம் இருக்கும். 'கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்' இது வேற கதை சார். ஸ்டாப் வந்துடுச்சு இறங்குங்க.
- Mano Red / 27.8.17