மர்ம காய்ச்சல்...???
http://eluthu.com/kavithai/94006.html
காலை மூன்று மணிக்கு
தூக்கம் கலைந்தேன்.
திடிரென எழுந்து
சற்று தூரம் நடந்தேன்.
எங்கேயோ பார்த்து
தனியாக சிரித்தேன்.
யாரோ அழைப்பதாக
நினைத்து ஓடினேன்.
பல் துலக்க நினைத்து
சாப்பிட சென்றேன்.
சாப்பிட்டதாக உணர்ந்து
குளித்தும் விட்டேன்.
சட்டை அணியாமல்
பஸ்ஸில் சென்றேன்.
எங்கோ சென்று பாதி வழியில்
திரும்பி வந்தேன்.
எண்களை பதிக்காமல்
தொலைபேசியில் பேசினேன்.
மழை பெய்வதாக எண்ணி
வெயிலில் நனைந்தேன்.
மணிக்கு ஒருமுறை
கண்ணாடியை கண் கலங்க வைத்தேன்.
தலை சீவிச் சீவி
சீப்பை தற்கொலைக்கு தூண்டினேன்.
இதெல்லாம் எதற்கு என்று புரியாமல்,
செய்வினை என தாய் அர்த்தம் கொண்டு
சாமியாரிடம் கைதியானேன்.
தெய்வத்திடம் கேட்டு குறி சொன்ன சாமியார்
இது செய்வினை அல்ல செயப்பாட்டு வினை
இவனுக்கு மர்ம காய்ச்சல் என தீர்ப்பு எழுதினான்.
யாருக்கும் தெரியாது
இது காதல் பேயின் சதி என்று....!!!