வெள்ளை காகிதம்..!!!
http://eluthu.com/kavithai/93973.html
பள்ளி சென்று படிக்கும்
பதின்மூன்று வயது பூவுக்கு,
இரும்பினால் காப்பு செய்து
திருமணம் முடித்தனர்-அவளை
பெற்றதாய் பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள்..
திருமண பந்தம் தொடங்கும் முன்பே,
கணவரை எமனுக்கு விற்று விட்டாள்
நோயின் காரணமாக..,,,,
விளையாடிகொண்டிருந்த அவளிடம்
பூவும் பொட்டும் சண்டையிட்டு பிரிந்தது...??
வெள்ளை உடை தோழியானது...!!!
எதுவும் புரியாமல்,
சொல்லவும் முடியாமல்,
என்னவென்றே தெரியாமல்,
அந்த மழலை பூ திணறியது.
முள் வேலிக்குள் முடங்கிய பூவை,
வார்த்தை தீயினால் சுட்டார்கள்,
நான்கு விதமாய் பேசும் அந்த நால்வர்கள்...!!
என்ன வரம் வங்கி வந்தாளோ,
இப்படி ஒரு வாழ்க்கை-என
ஊர் பெரிசுகள் ஒப்பாரி வைக்க,
வரம் கொடுத்தவன் வேடிக்கை பார்த்திருந்தான்..??
யாரு செய்த பாவமோ..???
எனக்கு மகளாக வந்தாய்-என
தாய் தன் புலம்பல் விதைகளை,
ஆழமாய் விதைத்தாள்,,..!!
விளையாட வராமல் உனக்கு
என்னடி பெரிய வேலை..???
இனிமேல் உன்னுடன் பேசமாட்டோம்-என
சிறு தோழிகள் கோவமாய் தோலுரித்தனர்..!!
சோகம் புடைசூழ வந்த மாமியார்,
என் மகனை கொல்ல வந்த பாவி,
நீ நாசமாய் போவாய் என
தன் பங்கு உரையை சிறப்பாக முடித்தாள்...!!
சிலையாக உருகி நின்ற அவளை,
நிலவு மட்டுமே ஆறுதலாக பார்த்தது.
இவளும் என்னை போலவே
ஒன்றும் எழுதப்படாத "வெள்ளை காகிதம்"
யாரும் கிழித்து விடாதீர்கள்....!!!
No comments:
Post a Comment