பகுத்தறிவற்ற பார்வை கோளாறிலே கண்ணில் தோன்றியன எல்லாம் பயத்தில் கடவுளாகி, மனித மூளையின் ஓர் மூலையில் மூடநம்பிக்கை வேரூன்றியது..!!! விருப்பம் நிறைவேறினால் மட்டுமே கடவுளுக்கு காணிக்கை என ஆன்மீக சிந்தனை பெற்று, கடவுளை காட்சி பொருளாக்கி கண்ணில் ஏற்றுகின்றனர்..!!!
படைத்ததனாலே அவன் கடவுளெனில் என் கடவுளாக பெற்றோர்..!!
துன்பத்தில் கடவுள் தேவையெனில் என் கடவுளாக நண்பன்..!!
புலம்புவதற்கு கடவுள் வேண்டுமெனில் என் கடவுளாக கண்ணாடி..!!
கடவுள் உண்மை என்பதை ஒப்புகொண்டால் அவன்பால் கொண்ட பொய்களை யார் ஒப்புக்கொள்வது..???
உன்னை முழுமையாக எப்போது தெரிந்து கொள்கிறாயோ, அப்போது நீயும் உனக்கு ஒரு கடவுளே..!!