www.gamblinginsider.ca

09 May 2013

சில நேரங்களில் பல மாற்றங்கள்...!!!


நீண்ட இடைவெளிக்கு பிறகு 
உன்னை பார்த்த போது 
உன்னில் பல மாற்றங்கள்..!! 
உனக்கும் உனக்குமே பொருந்தாத 
புதுப்புது திருப்பங்கள்..!! 

எதையும் நோக்காத உன் கண்கள் 
யாரையோ காண துடித்து 
கலங்கி நிற்கிறது..!! 

வார்த்தைகள் விரும்பாத உன் செவிகள் 
கவிதைகள் கேட்டு கேட்டு 
சிவந்து போயிருக்கிறது..!! 

சிரிக்க மட்டும் பிறந்த உன் இதழ்கள் 
யார் பெயரையோ சொல்லி பார்த்து 
உலர்ந்து வாடியிருக்கிறது...!! 

தூரிகை பிடித்த உன் விரல்கள் 
எவனோ ஒருவன் விரல் பிடிக்க 
நுனியில் தவமிருக்கிறது..!! 

வளைந்து செல்லாத உன் கால்கள் 
எவன் பாதையோ தேடி 
தடம் மாறி கிடக்கிறது..!! 

துள்ளல் நிறைந்த உன் இதயம் 
துளையிட்டு சென்ற அவனை 
நினைத்து துடியாய் துடிக்கிறது..!! 

பல மாற்றங்கள் உன்னில் நிகழ்ந்து 
சிலநேரங்களில் சில மாற்றங்கள் மட்டுமே 
என்பதை பொய்க்க செய்துவிட்டது..!!