www.gamblinginsider.ca

08 May 2013

கிழிந்தது கவிதை மட்டுமல்ல..???


கண்ணாடி நெஞ்சே கண்ணாடி நெஞ்சே, 
கல் வீசி போனவள் யாரோ..?? 
முன்னாடி வந்து முள் வீசி கொன்று 
முகம் மறைத்து போனவள் யாரோ..?? 
கலப்படம் இல்ல காதலொன்றை 
கல்லறை வரை தருவேனே..!! 
கடல் விட்டு சென்ற மிச்ச அலை கொண்டு 
உன்னுயிர் கோர்த்து தருவேனே..!! 

ரத்தமில்லா இதயமொன்று 
சத்தம் போட்டு துடிக்கிறதே, 
எட்டி பிடித்த நினைவு கொண்டு 
ஏக்கத்துடன் அலைகிறதே..!! 
காதல் சொல்லாத வரிகளுக்கு 
சோக போராட்டம், 
சொல்லி வந்த வரிகளுக்கு 
இன்றும் ஏமாற்றம்..!! 

உன் நினைவு கொண்ட உடலின்று 
உயிரின்றி தவிக்கிறதே, 
பொத்தி வைத்த ஆசை இன்று 
பூகம்பமாய் வெடிக்கிறதே..!! 
உன்னை பார்த்த கண்களுக்கு 
மீண்டும் பசிக்கிறது, 
பார்க்காத கண்களுக்கு 
பார்வை பறிபோனதே..!! 

உன்னை எழுதி எழுதி கிழிந்தது 
காகித கவிதை மட்டுமல்ல, 
காற்றாய் நீ நிரம்பிய என் இதயமும் தான்..!!!