www.gamblinginsider.ca

10 August 2013

கேவலமான தற்கொலைகள்...!!!

யாருக்கும் கிடைத்திடாத 
மனிதப்பிறவியை மாய்த்து, 
யாருக்காகவோ தற்கொலை செய்யும் 
கேவலமான பிறவிகளின் 
ஆன்மா பார்த்து கேட்கிறேன், 

பத்து மாதம் சுமந்து, 
பனியிலும் வெயிலிலும் 
பார்த்து பார்த்து வளர்த்த 
உன் தாயை நினைத்திருந்தால் 
நீ தற்கொலைக்கு துணிய மாட்டாய்..!!! 

இரவுகள் அத்தனையும் தூங்காமல் 
இடியை விட கொடிய வலி தாங்கி, 
இரத்தம் சிந்தி பெற்றெடுத்த உன்னை 
எவனுக்கோ காவு கொடுக்க போகிறோம் 
என அவளின் பிரசவத்தில் தெரிந்திருந்தால் 
உன்னை அப்போதே சவமாக்க 
சொல்லி இருப்பேன்..!! 

இப்படியொரு கேவலமான 
பிணமாய் போவதற்கே 
நீ பூமியில் பிறந்தாய் எனில், 
உன் பிறப்பு கூட ஒரு வகை இறப்பு தான்...!!! 

மயிர் போல உயிர் துறக்கும் 
இப்பிறவிகளை நினைத்தால் 
அழுகையை முந்தி கொண்டு 
சிரிப்பே முதலில் வருகிறது..!! 
இது போல் முட்டாள்கள் 
இருந்தால் என்ன இறந்தால் என்ன..???