www.gamblinginsider.ca

22 July 2014

நீயாக நான்....!!!(Mano Red)

நீ நீயாக இரு
இல்லை
நீயாக
நான் மாறி விடுவேன்...!!

நீயாக நான் மாறுவது
சாத்தியமற்றது,
உனக்காக
நான் மாறுவதும்
போலியானது...!!

நான் நானாக
இருக்கும் போது
என்னை அதிகம்
நேசிக்கிறேன்,
உனக்காக மாறும் போது
உள்ளிருந்து எங்கேயோ
உன்னை வெறுக்கிறேன்..!!

எனக்காக பெறுவதை விட,
உனக்காக சில
இழக்கும் போதும்,
விட்டுக் கொடுக்கும் போதும்
அதீத கர்வம் சுமக்கிறேன்...!!

இதைத் தான்
போலி என்கிறேன்..
ஏனென்றால் உலகத்திலே
போதையான விசயம்
சுயமாக இருப்பதும்
சுதந்திரமாக வாழ்வதும் தான்..!!

நானும் போதை கொண்டு
போலி ஆகிறேன்,
உன்னை நேசிப்பதும்
உனக்காக மாறுவதும்
எனது சுயநல சுதந்திரமே..!!
என் அதிக பட்ச ஆசையும்
இதுவாகத் தான் இருக்கும்..!!