பருவமெய்தலில்
கூடவே
பக்குவமடைகிறாள்,
வெக்கப்படுதலிலும்,
நாணிக் கோணுதலிலும்…!!
வெளி உலகம்
அறியாதவள்
இவ்வுலகிற்கு
ஏதொவொன்றை
வெக்கத்தின்
விளிம்பிலிருந்து
வெளிக்காட்ட
முனைகிறாள்…!!
பிறர் தன்னை
நோக்குவதை
பெரிதும்
விரும்பாதவள்,
பிசுபிசுப்பில்
பிரியும்
பழந்தேனாய்
நெளிந்து குழைகிறாள்…!!
எதைக் கண்டும்
எளிதில் அஞ்சுகிறவள்,
கோழைக் கோபத்தையும்
கோவைப்பழ
முகச் சிவப்பில்
கூச்சப்பட்டு
மறைக்கிறாள்..!!
முகத்தோடு
முகம் நோக்க
முயன்று பழகாதவள்,
நாணத்தின்
நெகிழ்தலில்
நகம் கடித்து
கால்விரல் தேய்க்கிறாள்…!!
அவளின் வெக்கப்படுதலும்,
நாணிக் கோணுதலும்,
இயலாமையின்
அர்த்தம் அல்ல..!!
இயற்கையின்
தன்மையில் அவளின்
தலைகுனிதலும்
மென்மை தானே..!!