
நான் இருக்கிறேன்...!!!
ரோஜாக்கள் நீ மட்டுமே சூட எண்ணி
போராட்டம் நடத்தலாம்..!!
உன் காலடி தடம் பார்க்க
பேருந்து நிறுத்தங்கள் தவம் புரியலாம்...!!
உன் குரல் கேட்டு தொலைபேசியும்
உனக்கு காதல் சொல்லலாம்..!!
நீ தினமும் நடப்பாய் என
கற்கள் கூட மெத்தை அணியலாம்.!!
முதலில் உன்னை பார்ப்பதற்காக
சூரியனே நிலவை கொல்லலாம்..!!
உன்னை மகிழ்விக்க வானவில்,
நிறங்களை கொஞ்சம் சேர்க்கலாம்..!!
நீ உண்ணும் போது அழாமல் இருக்க
காரமும் தன்னை இனிப்பாக்கலாம் ..!!
உன்னை திரும்பி பார்க்க வைக்க
நெருப்பும் தலைகீழ் சாகசம் செய்யலாம்..!!
உன் அழகின் மேலே பொறமை கொண்டு
வண்ணத்துபூச்சிகள் சாபமிடலாம்..!!
எது எப்படியோ,
நான் இருந்து,
என்னுயிர் தந்து,
உன்னை மீட்பேன் -இந்த
இயற்கையின் அளவில்லா
(சீற்றம்)காதலில் இருந்து...!!!