www.gamblinginsider.ca

16 February 2017

கோக், பெப்சி, புரச்சி - Mano Red

பெப்சி, கோக் புரச்சி 💪💪
-
#பெப்சி#கோக் தவிர்த்து இளநீர் குடியுங்கள். இதனால் கார்ப்பரேட் கட்டுமானம் நகர்ந்து உடனே இடிஞ்சிரும்! தமிழனாக இருந்தால் இளநீர், போவன்டோ குடியுங்கள். அப்போதுதான் கார்ப்பரேட்காரன் சோத்துல மண்ணு விழும். இளைஞர்சக்தினா என்னன்னு அவங்களுக்கு பயம் காட்டணும்!
இப்படிப் பல சமீபத்திய வாட்ஸாப் புரட்சி வாசகங்கள் பெப்சி, கோக் பான ஒழிப்பு போராட்டத்திற்கு 24X7 காலமும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
-
நம்ம போராட்டம் எதிர்ப்பு எல்லாமே சரிதான். கேக்க, பாக்க நல்லாதான் இருக்கு. ரத்தம் கொதிக்குது. ‘தெருவெல்லாம் வீட்டுக்கு வீடு நட்டு வைத்திருக்கும் தென்னை மரங்களில் இருந்து இளநீராகக் குடித்து இந்தப் பிறவியைக் கடக்க தமிழன் நினைக்கிறான்’ என பெப்சி, கோக் பானங்கள் நாட்ட விட்டு ஓடுற அளவுக்கு தடை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்கு மாறாக, ‘பெப்சி, கோக் வாங்காமல் தவிர்ப்போம்’ அப்படித் தவிர்த்தால் கார்ப்பரேட் கம்பெனிகளோட ஆதிக்கம் அடங்கிரும்னு சொல்றது, எரும மாடு வளர்த்த காசுல ஏரோபிளேன விலை பேசலாம்னு சொல்ற மாதிரி சும்மா ஏதாச்சும் சொல்லாதீங்க மக்கழே!
நம் வணிகர் சங்கங்களுக்குத் தெரிந்தே குட்கா, பான் மசாலா தடைக்குப் பிறகு மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்கும் கடைகளில் பெப்சி, கோக் நிறுவன பானங்களின் விற்பனையும் இரட்டிப்பு விலையில் தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டு லிட்டருக்கு அரை லிட்டர் இலவசம் என்பது போன்ற தள்ளுபடிகளுடன் வியாபராமாகும் ஷாப்பிங் மால்களில் வந்து பார்த்தால் தெரியும் நம் பெப்சி, கோக் போராட்டத்தின் சாயல்.
-
நல்லவேளையாக பெப்சி, கோக் கங்கை நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட புனித பானம்னு விளம்பரம் பண்ணல. பெப்சி நிறுவனம் இனிமே அப்படி விளம்பரம் பண்ணா, தீர்த்தம் தெளிக்குற மாதிரி தலைல ரெண்டு சொட்டு விட்டுகிட்டே எத்தனை போராளிகள் பூஜை ரூம்ல வச்சு பூஜை பண்ணி பெப்சி, கோக் குடிப்பாங்களோ. இன்னும் கொஞ்சம் போனால் இளநீரை வாட்டர் கேன்களில் அடைத்துக்கொண்டு போய் கே.எஃப்.சியில் சிக்கனைக் கடிக்கும்போது குடிப்பார்கள் போல.
-
#பி_கு: நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் பெப்சி, கோக் வகை பான விளம்பரங்களை பத்து வருடங்களுக்கு மேலாக #மக்கள்தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவில்லையாம். எத்தனை பேர் மக்கள் தொலைக்காட்சி பார்ப்போம் என்று தெரியவில்லை. மாறாக, நாம் அதிகம் பார்க்கும் #விஜய் டிவியும், படிக்கும்#விகடனும் இந்த விளம்பரங்களைத் தவிர்ப்பார்களா?
-
நம்மைச் சுற்றி இருக்கும் ஏகப்பட்ட ஓட்டைகள் வழியாக இந்த உலகைப் பார்க்கும்போது அழகாகவும் சில சமயங்களில் ஆக்ரோஷமாகவும்தான் தெரியும். ஆனால் அந்த ஓட்டைகளை வைத்து எதையும் அள்ள முடியாது எனும்போதுதான் எல்லாமே சிதறிவிடுகிறது.🙂
Facebook (28.1.17)

திட்டுதல் என்பது... - Mano Red

திட்டுதல் என்பது...
-
(எங்க ஊர்ப்பக்கம் 'வைதல்') திட்டுவதற்கான சொற்கள் நிறைய உண்டு. அது நேரம், காலத்திற்கு ஏற்றபடி மாறும். மகிழ்ச்சியில் திட்டும்போது மகிழ்ச்சியையும் கோவத்தில் திட்டும்போது சோகத்தையும் தரும். அது சொல்லையும், சொல்லும் கணம் மற்றும் கனத்தையும் பொருத்து அமையும். திட்டிப் பேசலாம்; திட்டிக் கொஞ்சலாம்; திட்டி அதிகாரம் செய்யலாம்; திட்டி வேலை வாங்கலாம்; திட்டி பாசத்தைக் கொட்டலாம்; திட்டி வெறுக்கலாம்; இப்படி எல்லாவற்றுடனும் திட்டுதலைப் பொருத்திக் கொள்ள முடியும். பிறருடனான நெருக்கத்தைக் கூட்டிக் காட்ட கொஞ்சல் வார்த்தைகளை விட திட்டுதலுக்கு போதை அதிகம். திட்டுவதற்கு சொற்கள் முக்கியம்தான். சாதாரண சொல்லையும் முக பாவனையில் அசிங்கமாக மாற்ற முடியும். திட்டிய வார்த்தைகளை வைத்தே சமாதானம் செய்ய முடியும்; திட்டியே உயிரை எடுக்க முடியும்; திட்டியே காதலிக்கவும் முடியும்; குறை கூறுவதையும் திட்டுதலாக்க முடியும். அம்மா செய்யும் உணவின் குறைகளைத் திட்டியபடியே வயிறு புடைக்கச் சாப்பிடவும் முடியும். இப்படித்தான் பல சமயங்களில் பலருக்கு திட்டுதல் தேவைப்படும். அதில், பலருடைய திட்டுதலுக்குப் பின்னால் பாசமும் உரிமையில் வரும் கோவமும் இருக்கும். மாறாக, பிறர் நம்மைத் திட்டியதுதான் மனம் வருத்தம் தரும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் திட்டாமல் நயமாகப் பேசி நல்ல சொற்களை வைத்தே நம்மை உயிருடன் கொல்லும் பலபேர் நம்முடன் தினமும் உறவாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
😶😶
Facebook (29.1.17)