www.gamblinginsider.ca

10 April 2013

அவளின் அனுமதியன்றி யாரும் படிக்க வேண்டாம்...!!!


கனவுகளில் அவள் உலகம், 
கற்பனையில் எனது கடிதம், 
வார்த்தை இழந்த மௌனம், 
வரிகள் மறந்த நினைவு, 
பணிய மறுத்த பேனா, 
பதறி துடித்த காகிதம்..!! 
அவளை எழுத நான் துணிந்த போது 
இதயம் குதிப்பதை தான் உணர்ந்தேன்.!! 

அமைதியுடன் அவள் சிரித்தால், 
வெக்கத்திலே நான் சிவப்பேன், 
புன்னகை அவளது சிறப்பல்லவோ..!! 
எனை மறந்து நான் இருக்க, 
கட்டி அணைத்து எனை எழுப்ப, 
கண்களில் காதல் மின்னல்..!! 
பட்டென கோவம் அவளுக்கெனில், 
சட்டென அழுவது நானாகி, 
மடியில் தவழ தவம் கிடப்பேன்..!! 

கைகோர்த்து அவள் நடந்தால், 
குழந்தையாகி உடன் செல்வேன், 
பாசம் அவளுக்கு வேசமில்லையே..!! 
பணிவுடனே நான் இருந்தால், 
பணிய மறுத்து அவள் இருப்பாள், 
காதலில் சண்டை பணிந்ததுவோ..!!! 
பொய்களுக்கு அவளை பிடிக்கும், 
அவளுக்கு என்னை மிக பிடிக்கும், 
என்னை பொய் சொல்லி கவருவதில் 
அவளுக்கு எதிரி அவள் மட்டுமே..!!