www.gamblinginsider.ca

30 September 2013

தோற்கப் பழகுவோம்...!!!

தோல்வி தரும் சோகத்தினை 
தோளில் சுமந்து நிற்கையில், 
வேட்கையுடன் வெற்றிக்கனி பறிக்க 
விடாமுயற்சியுடன் வா நண்பா 
தோற்கப் பழகுவோம்..!! 

28 September 2013

தோற்றுப் போன இதயம்...!!!

காதல் முறிவென்பது, 
இணைந்து காதல் செய்த 
இரு இதயங்களில், 
ஒரு இதயம் செய்யும் 
முட்டாள்தனமான 
காதல் கருக்கலைப்பு..!! 

25 September 2013

நல்லதோர் காதல் செய்தேன்....!!!

உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து 
மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து 
நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து 
அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!! 

24 September 2013

நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!

அமைதியான கிராமம் 
அறிவற்ற மக்கள், 
கலப்படமில்லா காற்று, 
கர்வம் நிறைந்த மனது, 
இறைவன் வாழும் இயற்கை 
இதயமற்ற மனிதன்..!! 

21 September 2013

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!

தோலும் சதையும் சூடி 
காற்று நிரப்பிய வெற்று உடம்பை 
உப்பில்லாத உணர்ச்சி பூட்டி 
திரையிட்டு மூடிக் கொண்டால் 
ஐம்புலன்களும் அடங்குமென 
எப்படி ஒப்புக் கொள்வது..?? 

19 September 2013

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!

குடும்பம் நாசமாய்ப் போனாலும், 
குடித்துக் குடித்து 
நாட்டை வாழ வைக்கும் 
நல்ல குடிமகன்களே...!! 

சாகப் போவது தெரிந்தும் 
சாயந்திர நேரம் வந்ததும் 
சரக்கடிக்க துடிக்கும் 
சரித்திர நாயகர்களே..!! 

16 September 2013

மகனுக்கு ஒப்பாரி....!!!

வானம் வறண்டிருச்சு, 
வம்சம் சரிஞ்சுடுச்சு, 
வடக்கு நோக்கி போனவனே 
வராம எங்க போன..?? 

14 September 2013

வேலை தேடும் படலம்...!!!

வேலை வேலை வேலை 
வேலை தேடுவதே ஒரு வேலை...!! 

வேலை தேடி 
நான் அலைஞ்ச 
நாட்களெல்லாம் 
நாசமாக போய்விடுமோ...?? 

11 September 2013

எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!

அமரகவியே சொல், 
முறுக்கு மீசையும், 
முண்டாசு தலையும், 
மிடுக்கும் தோற்றமும், 
மிரட்டும் பார்வையும், 
மின்னல் நடையும், 
மீள்பதிவுப் பேச்சும், 
மீண்டும் நாங்கள் 
காண கண் கூடுமோ...??? 

10 September 2013

50 கிலோ தாஜ்மஹால்....!!!

அந்தப்புர அழகிகளும் 
அவனிகை விலக்கி 
அதிசயமாய் அசந்து நிற்க, 
அத்தனை அம்சங்களும் 
அதிகபட்சம் அவள்கொண்டு 
அன்னமாய் நடந்து 
அலட்டிக் கொண்டு போனாள்..!!! 

09 September 2013

இங்கு கடவுள் விற்கப்படும்...!!!

கடவுளைக் கூவி விற்கிறான் 
கூறுகெட்ட மனிதன், 
எடையிட்டு ஏலமிடுகிறான் 
ஏட்டறிவைத் தொலைத்தவன், 
கையால் செய்த ஒன்றை 
கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!! 

06 September 2013

ஆணியே புடுங்க வேண்டாம்...!!

அன்றாடங் காய்ச்சிகளின் 
அடிவயிற்றில் அடித்து 
அகமகிழ்ச்சி அடையும் 
அரைகுறை பாடம் கற்ற 
அரசியல்வாதிகளே..!! 

05 September 2013

பெண்ணே, நாய்கள் ஜாக்கிரதை...!!

பெண்ணே, 
அருமையான உன் அறிவால் 
பெருமை பெற்று வலம் வருகையில் 
சிறுமை என எண்ணி நகைக்கும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! 

02 September 2013

வானம் பார்த்த பூமி...!!!

கந்தக பூமி 
காய்ந்த நிலம் 
கஞ்சிக்கு வழியின்றி 
கருவாடாய் வாடும் முகம்..!!!