.jpg)
28 November 2012
பேஸ்புக்..?
http://eluthu.com/kavithai/93552.html
முகம் தெரியாத "அவனை"
"அவள்"என்று நினைத்து
காதல் சொல்ல வைத்த
விஞ்ஞான திருடன்...!
Labels:
சமுதாய கவிதைகள்
ஆற்றில் போடப்படும் தர்மங்கள்...!!!!
http://eluthu.com/kavithai/94625.html
கை கட்டி நிற்பவனுக்கு கோடிகளையும்,
கையேந்தி கேட்டவனுக்கு கோவத்தையும்
அள்ளி அள்ளி கொடுக்கும் ஆச்சரியமானவர்களே..!!
ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடுவேன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உள்ளங்களே..!!!
இறைவனுக்கு
வறுமை இல்லை,
பசியும் இல்லை,
எனவே பணமும் தேவை இல்லை..!!
ஆற்றில் போடுவதே தவறு-இதில்
அளந்து தான் போட்டேன் என்று சொன்னால்
என்னவென்று கருதுவது...????
இல்லாதவர்க்கு அள்ளி கொடுங்கள்
சிவந்த உன் கைகளை காண
இறைவனும் இறங்கி வருவான்..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
தொலைந்து போன கடிதங்கள்...???
http://eluthu.com/kavithai/94506.html
அன்புள்ள என ஆரம்பித்து
நலம் நலமறிய ஆவல்...!!!
என மகனுக்கு கடிதம் எழுத தொடங்கும் போதே
இனமறியா சந்தோசம் தாயின் மனதில்..
நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்
உன் உடம்பை பார்த்துகொள்..
நல்லா சாப்பிடு,,
எங்கள பத்தி கவலை வேண்டாம்..
இந்த வருடம் நல்ல மழை
செடிகள் நல்லா வளர்ந்துருக்கு..
நீ அனுப்பிச்ச பணத்துல தான்
உரம் வாங்கி விதச்சோம்
ஆடு ஒரு குட்டி போட்டுள்ளது
உன் பெயர் தான் குட்டிக்கு வச்சுருக்கோம்
நல்லா வெள்ளையா அழகா இருக்கு.
நீ வரும் போது பெரிசாயிடும்..!!
இந்த வருடம் ஊர்ல திருவிழா,
மதுரை கரகாட்டம் வருது
உனக்கு புடிச்ச ரெகார்ட் டான்ஸ்
நிகழ்ச்சி கூட போடுறாங்க..!!
அப்புறம் பாப்பா இந்த வருடம்
பத்தாவது வகுப்புக்கு போறா,
புத்தகம் வாங்க அடுத்த முறை
சேர்த்து பணம் அனுப்பி விடு...
இப்படிக்கு உன்னை காணமல்
தினமும் வாடிக்கொண்டிருக்கும்
அம்மாவும்,அப்பாவும்..
இப்படி குலைந்து குலைந்து
கடிதம் எழுதிய காலம்
தொழில்நுட்ப வளர்ச்சியில்
தொலைந்து தொங்கி நிற்கிறது...
தபால் பெட்டியின் நினைவுகளை
அழிக்க வந்த நவீன கொலைகாரனாக,
"குறுந்தகவல்"மட்டும் விரல்களில்...???
Labels:
சமுதாய கவிதைகள்
என்னை விட்டு விடு...!!!
http://eluthu.com/kavithai/94747.html
விழிகளிலே உன் நினைவுகளை,
புதைப்பது போல் உணருகிறேன்.
உனை மறக்க
உன் நினைவிழக்க
இறப்பதற்கு துணிகிறேன்.
வேண்டாம் கொடுமை,
மின்னலே என்னை விட்டு விடு....!!
உன்னை நான் வர்ணித்த வரிகளை
திருப்பி தந்து விடு...,
என் தேவதையே,
முன் பனித்துளியே,
வானவில்லே,
வால் நட்சத்திரமே..!!!
என் இதய துடிப்பையும்
உனக்கு கடன் தருகிறேன்
என்னை தொலைத்து விடு...!!
உன்னை விட்டு
போக துணிந்த எனக்கு,
நீ தந்த சுவடுகள்
ஆணியறைந்த இதயம்,
நசுக்கப்பட்ட பூக்கள்,
கண்ணீர் விட்ட கடிதங்கள்,
மரித்துப்போன மணித்துளிகள்...!!!
நான் போகிறேன் அன்பே
இரவுகளை தேடி அல்ல,
நீ இல்லாத பகலை...!!!!
Subscribe to:
Posts (Atom)