www.gamblinginsider.ca

02 May 2018

பத்மாவதி ❤ விமர்சனம்

பத்மாவதி 
-
ராஜகுருவாக இருக்கும் பிராமண பிரம்மச்சாரியின் பழிவாங்கும் எண்ணத்தால் சிதையும் நாடு. நிஜ ரன்வீர் சிங்கை ரத்தன் சிங்காக நடிக்க வைக்காமல் கில்ஜியாக மாற்றியது வெறித்தனம். அவரது கிறுக்குத்தனமான கொடூர அழகியலை, நெருப்புக் கோழியை உயிருடன் வேட்டையாடி வருவதில் ஆரம்பித்து, பிரம்மச்சாரியின் தலையை வெட்டி பத்மாவதிக்கு அனுப்பும் வரை பார்க்கலாம். அப்படிப்பட்ட அரசனின் நாவுக்கே பலசுவைகள் தேவைப்படும்போது உடலுக்கு பலசுவைகள் தேவைப்படாத என்ன? அங்கே ஆரம்பிக்கிறது பத்மாவதியின் வதனப் பிரச்னை. ராஜா ரத்தன் சிங்காக கொள்கை, நியாயங்களுடன் கட்டுக்கோப்பாக ராஜபுத்திர அரசராக வந்துபோகிறார் ஷகித் கபூர். கடைசியில் கில்ஜி பத்மாவதியை அடைந்தாரா இல்லையா என்பதுதான் கதை. (இந்த க'லவ்'வர கதைக்காடா கலவரம் பண்றீங்க😢)
* சாவதற்கு முன் அந்த உடைகளையும் நகைகளையும் ஒருமுறையாவது அணிந்து பார்த்துவிட வேண்டும் என்று படம் முழுக்கத் தோன்றியது. பத்மாவதியின் முத்துமாலையில் இருந்த சிறு நட்சத்திரத்தின் நடுவே பதிக்கப்பட்டிருந்த மரகதம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. முத்துமாலை பாசி கோப்பதற்கு ஒருவர், நெய்தது ஒருவர், பட்டன் தைப்பதற்கு ஒருவர் என இதற்காக உழைத்த ஏகப்பட்ட பெயர்களை இறுதி டைட்டிலில் பார்க்க முடிந்தது. (வாழ்ந்தா அங்க வாழணும்😎)
* சிலைகள் செதுக்கிய அரண்மனை, எந்நேரமும் சந்தனம், ஜவ்வாது அங்கே மணக்கும் என்பதை நம் கண்களால் சுவாசிக்க முடிந்தது. அரண்மனையின் மொத்த அழகையும் விளக்குகளும் ஓவியங்களும் சொல்லிவிடுகின்றன. (ரசிகன்டா நீங்க )
* கூமர் நடனம் ஆடும்போது லேசாக அசைந்து கொடுக்கும் பூமி, கரை புரண் டோடுதே கனா பாடலுக்கு மொத்தமாகக் குலுங்கிவிடுகிறது. (மனுசன் மாதிரி ஆடுங்கடா😍)
* சித்தூர் முழுக்க வண்ணமயம், தீபாவளி, ஹோலி என சிவப்பு நிறத்தைத் தெறிக்க விட்டிருக்கிறார்கள். கருஞ்சாந்து இரவை இன்னும் குளுமையாகக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவு பேரழகு. (கலைஞன்யா 😍)
* போரின் பிரமாண்டத்தைப் புழுதி பறப்பதில் காண்பித்தால் போதும் என நினைத்தவர்கள், தாமரை இலை பாதம் கொண்ட பத்மாவதியின் அறையைச் சுற்றி இலையுடன் தாமரைகளை தண்ணீரில் நிரப்பி வைத்திருக்கிறார்கள். (அடேய் கலையலங்காரம் யார்ரா நீ😍)
* 'அழகு என்பது காண்பவர் கண்ணைப் பொறுத்தது' என்று சொல்லும் பத்மாவதி நிலவில் தோய்த்த அழகு. பளிங்கு போல மின்னுகிறாள். (தீபிகா )
* ஒரேயொரு நாள் வாழத் துடிக்கும் காமத்தை, காதலாக எண்ணி சிறகடிக்கும் கில்ஜியை பறவைகளின் காதலனாகக் காட்டியது பின் நவீனத்துவக் கவிதை.
இவர்கள் யாரென்பதைச் சொல்ல ஒற்றை வசனங்கள் போதும்
கில்ஜி: வரலாறு என் ஒருவனை மட்டுமே நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ரத்தன் சிங்: சிரம் துண்டித்தாலும் துடிக்கும் இதயத்துடன் எவன் போரிடுகிறானோ அவனே ராஜபுத்ரன்
பத்மாவதி: ராஜபுத்ரனின் வாளுக்கு இணையாக, ராஜபுத்ரியின் வீரம் அவளது காப்பில் உள்ளது.
மொத்தத்தில் பன்சாலி எனும் இரசனைவாதி தூவிய இரசவாதத்தால் பத்மாவதி ஜொலிக்கிறாள்.
Mano Red /26.1.18