www.gamblinginsider.ca

11 May 2013

மதிப்பெண் இல்லையெனில் மரணமா..???


பிறக்கும் போதே என்னவாக வேண்டுமென 
தந்தை தீர்மானிக்கும் போதே, 
குழந்தைகளின் பள்ளிகூட போராட்ட 
வாழ்க்கை ஆரம்பமாகிறது..!! 

தந்தை தான் ஆக நினைத்ததையும், 
அவருக்கு பிடித்த நாயகனையும், 
பக்கத்துக்கு வீட்டு பணக்கார மகனையும், 
மனதில் நினைத்து நினைத்து தான் 
தன் மகனை வளர்ப்பார்...!! 

விளையாடும் போதும், 
சாப்பிடும் போதும், 
அருகில் உறங்கும் போதும், 
மகனை தனக்கென தயார்படுத்தி விடுவார்..!! 

நாளைடைவில் தந்தைக்கு பிடித்த பாடம் 
அவனுக்கு பிடிக்காத பாடமாகி விடும்..!! 
தேர்வில் தவறிய பிறகு 
தந்தையிடம் அடி வாங்கி 
தன் கனவை புதைக்க தொடங்குவான்..!! 

அடித்தால் தான் படிப்பான் என 
தந்தை மனதில் சிறு கேள்வி எழும் போது 
அடிக்கு பயந்த மகன் 
பொய்கள் சொல்ல துணிகிறான்..!! 
பழகிய பொய்கள் வெடிக்கும் போது 
இருவருமே சிதைந்து விடுகிறார்கள்..!! 

மதிப்பெண் வாங்கவில்லையெனில் 
மடிந்து போ என தந்தை சொல்ல, 
தந்தை சொல் மீறவே தெரியாத மகன் 
சாவை அழைக்க துணிகிறான்..!! 
தவமிருந்து பிள்ளை பெற்றது 
இதற்குத்தானா...?? 

குழந்தைகளின் ஆசை என்னவென்று 
பெற்றோர் நீங்கள் கேட்டால், 
உங்களின் ஆசைகள் மட்டுமல்ல 
கனவுகளையும் சேர்த்து 
அவர்கள் நிறைவேற்றுவார்கள்..!!!