www.gamblinginsider.ca

14 May 2013

இரட்டை கிளவியுடன் என் வாழ்க்கை..!!


மினுமினுக்கும் மின்னல் மனம், 
பளபளக்கும் பச்சை நினைவு, 
கலகலவென கலங்கமின்றிய புன்னகை, 
ஜிலுஜிலுவென மகிழ்வாய் அப்போது திகழ்ந்தேன்..!

சிடுசிடுவென கோவம் தலைக்கேறும், 
கரகரக்கும் குரலாய் பேச்சும் மாறும், 
படபடவென பொரிந்து புகைந்து 
கிடுகிடுவென என்னை தாழ்த்தி கொண்டேன்..!! 

பரபரக்கும் கண்கள் கொண்டே 
திகுதிகுவென தீ பிழம்பு காட்டி, 
விறுவிறுவென வேகத்தோடு 
தகதக அனலாய் என்னை நான் அழித்துவிட்டேன்..!! 

சலசலப்பில்லாமல் மீண்டு வாழ நினைத்து 
திருதிருவென சந்தேகம் கொள்ளாமல், 
மடமடவென மீண்டும் திரும்பி 
தடதடவென என்னை மீட்டு பெற வேண்டும்..!! 

கசகசவென கசங்கிய வாழ்வை, 
மசமசவென நின்று அழிக்காமலும், 
வழவழவென நேரம் போக்காமலும், 
சரசரவென சாதனை படைக்க வேண்டும்..!!