.jpg)
30 July 2013
29 July 2013
சர்வாதிகாரக் குழந்தைகள்......!!!

குழந்தைகள்,
தேவதைகளின் அனுமதியின்றி
பூமியில் தவழும்
விளம்பர தூதர்கள்...!!
குழந்தைகள்,
கடவுள்களின் குணத்தை
தெரிந்தே திருடி வந்த
அழகு நகல்கள்..!!
Labels:
அன்பு கவிதைகள்
27 July 2013
கடவுள் பாதி,மிருகம் பாதி...!!!!
.jpg)
கடவுளின் நினைப்பு
நாம் படைத்த மிருகமே மனிதன்,
ஆனால் தெளிந்த உண்மை
மனித மிருகம் படைத்த
ஒன்றே கடவுள்..!!
26 July 2013
போதும்டா சாமி இந்த காதல்...????

போடி போடி எங்கேயோ போடி,
என் உயிரின் மிச்சம் அறுத்து போடி,
தூரம் சென்று மறைந்து போடி,
உன் துகில் மூடித் தொலைந்து போடி....!!!
24 July 2013
அன்புள்ள தங்கைக்கு....!!!!

தங்கை,
வார்த்தைகளிலோ,
பாச மொழிகளிலோ,
அடக்கிவிட முடியாத தேவதை...!!
Labels:
அன்பு கவிதைகள்
22 July 2013
என்ன பொண்ணுடா இவள்....!!!!

உன்னை பார்த்த நொடியில்
என்னுள் கொதிக்கும் வினா,
நானிருப்பது பூமியிலா இல்லை
பூக்களின் தெருவிலா..??
Labels:
காதல் கவிதைகள்
20 July 2013
கூட இருந்தே குழி பறிக்கும் நட்பு...!!!

நட்பு இன்னொரு நட்புக்கு
தீங்கு செய்யும் போது கூட
மன்னிக்கப்படுகிறது,
அதுவே,
துரோகம் செய்யும் போது
உயிர் எடுக்கவும் துணிகிறது..!!
Labels:
நட்பு கவிதைகள்
19 July 2013
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!
.jpg)
எங்கேயோ வேடிக்கை பார்க்கிறான்,
நம்மை பூமிக்கு அனுப்பி வைத்த
இறைவன்..!!!
18 July 2013
என்னைப்பற்றி நானே.....!!!!
.jpg)
இது தான் நான் என்று
சொல்ல முடியவில்லை,
இப்படி தான் நான் எனவும்
விளக்க முடியவில்லை..!!
17 July 2013
நினைவெல்லாம் நீ தானே...!!!
.jpg)
எங்கே தான் போனாயோ சொல்லாமலே,
நீயின்றி நானும் இங்கே இல்லாமலே,
என்ன தான் செய்வதோ புரியவில்லை,
ஏனோ தவிக்கிறேன்
புரியாமல் இருக்கிறேன்..!!!
Labels:
காதல் கவிதைகள்
16 July 2013
நிறமில்லாத வண்ணங்கள்...!!!

கண்கள் இருந்தும் காட்சிகள் இல்லை,
எங்கள் உலகில் வெளிச்சமே தொல்லை,
இருந்தும் பார்க்கிறோம்,
இறைவனிடம் கேட்கிறோம்,
அரிதாய் அமைந்த வாழ்வை
இனிதாய் மாற்ற வேண்டுகிறோம்...!!!
Labels:
சமுதாய கவிதைகள்
15 July 2013
என்னதான் வேண்டுமடி உனக்கு...???

திருப்பி திருப்பி கேட்டால்
தர மறுத்து விடுவேன்,
உன் கனவில் நானோ
வர மறுத்து விடுவேன்..!!
யாரோ போல என்னை கொல்லாதே,
என்னை விட்டு எங்கும் செல்லாதே..!!
Labels:
காதல் கவிதைகள்
13 July 2013
நண்பனின் மறுபக்கங்கள் ....!!

நண்பன்,
எப்படி சொல்வது அவனை பற்றி,
நினைத்தால் சிரிப்பையும்,
சின்ன அழுகையும் தரும்,
அவனின் மறுபக்கங்கள்...!!!
இறந்த கால நினைவுகளுக்கு
உயிர்கொடுக்கும் அவனே,
சில நேரங்களில் உயிரையும் எடுக்கிறான்..!!!
Labels:
நட்பு கவிதைகள்
12 July 2013
எட்டாம் அறிவு சொல்கிறது...!!!!

--------------------நட்பு-------------------------
முன்னேற வழி காட்டவும்,
முன்னேறினால் முதுகில் குத்தவும்,
முந்தி கொண்டு வரும் உயிர்- நட்பு..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
11 July 2013
நானும் கவிஞன் ஆகி விடுவேனோ....???

யாருமில்லா தனிமையின் ஓரம்,
யாருக்கோ எங்கோ நான் காத்திருந்தேன்,
கனவில் பூத்திருந்தேன்..!!
தீப்பிடித்த நிலவாய் நானும்
கண்கள் சிவக்க பார்க்கிறேன்,
நிஜமாய் நடிக்கிறேன்..!!
Labels:
காதல் கவிதைகள்
10 July 2013
நீ யார் என்று உனக்கு தெரியுமா...????
.jpg)
நீ யாரென்று உனக்கு தெரியும் முன்பே,
நீ யாரென உலகம் உனக்கு சொல்லி விடும்..!!
யாராகவும் நீ இருக்க ஆசைப்படாதே,
யார் யாரெல்லாம் உன் போல
இருக்க ஆசைபடுகிறார்கள் என்று பார்..!!
09 July 2013
இதுபோல் காதலி கிடைக்குமா...????

காதல் கொஞ்சம் வேண்டும்,
சிறு கண்ணீர் எனக்காக வேண்டும்,
என்னை எப்போதும் நினைத்து
உன் நிமிடம் கழிக்க வேண்டும்,
உயிர் என்னை விட்டு போனாலும்
என் நினைவில் நீ வாழ வேண்டும்..!!
Labels:
காதல் கவிதைகள்
08 July 2013
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்.....!!!

எவன் என்ன சொன்னால் என்ன,
உன்னை எட்டி உதைத்தால் என்ன,
உனக்குள் திறமைகள் இருக்கு
அது வெளிவர உன்னை திருத்து..!!
06 July 2013
உள்ளம் கொள்ளை போகுதடி...!!!

யாரோ,அவள் யாரோ,
தெரியாமல் தவித்தேனே
தெரிந்து கொள்ள துடித்தேனே,
உயிருக்குள்ளே ஒரு சத்தம்
அதை புரிந்துகொள்ள வரும் யுத்தம்..!!!
Labels:
காதல் கவிதைகள்
05 July 2013
மனிதக் காட்சி சாலை மனிதர்கள்...!!!
.jpg)
அவள் போகாத கோவிலும் இல்லை,
சுற்றாத மரமும் இல்லை,
இருக்காத விரதமும் இல்லை,
இப்படி தன்னை வருத்தி அழித்து
தனக்கொரு மகன் பிறக்க
மரணம் வரை சென்று மீண்ட
தாய்க்கு அன்பு மகனின் பரிசு
முதியோர் இல்லம் சேர்ப்பு..!!
Labels:
சமுதாய கவிதைகள்
04 July 2013
தான் அழகி என்ற "திமிரு" அவளுக்கு...!!

"அய்யோ" என
அவளின் அழகை பார்த்தவுடன்
சொல்ல தோன்றும்..!!
எத்தனை திமிரு அவளுக்கு
இருக்க வேண்டும்..!!
எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது
Labels:
காதல் கவிதைகள்
03 July 2013
புதிய கடவுள் செய்வோம்..!!!

கடவுள் என்பவன்
கல்லுக்குள்ளே ஒளிந்திருக்கும்
வெறும் காட்சி பொருள் என்றே
இந்த மானுடம் எண்ணுகிறது..!!!
02 July 2013
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்...!!!

அழகி உன்னை பார்த்து
ஈர்க்கப்பட்டதால் என்னவோ
வேறு பெண்களை பார்க்க துணிவின்றி
கண்களை மூடி நடக்கிறேன்..!!!
Labels:
காதல் கவிதைகள்
01 July 2013
திருட்டு நிலாவும்,திருந்தாத சூரியனும்...!!!!
.jpg)
உனக்காக உயிர் நோக
கடலோரம் நான் நின்ற நேரம்,
நிலவொன்று நிஜமாகி
உன்னை தேடி வழி கேட்க,
பொய் சொல்ல தெரியாமல்
உன் முகவரி தந்து விட
Labels:
கற்பனை கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)