www.gamblinginsider.ca

29 July 2013

சர்வாதிகாரக் குழந்தைகள்......!!!

குழந்தைகள், 
தேவதைகளின் அனுமதியின்றி 
பூமியில் தவழும் 
விளம்பர தூதர்கள்...!! 

குழந்தைகள், 
கடவுள்களின் குணத்தை 
தெரிந்தே திருடி வந்த 
அழகு நகல்கள்..!! 

குழந்தைகள், 
பெண் தெய்வங்களை 
பொறமை கொள்ள வைக்கும் 
அழகு சிலைகள்...!! 

குழந்தைகள், 
யார் கைகளில் இருந்தாலும் 
அவர்களையும் அழகாய் காட்டும் 
அதிசய கண்ணாடிகள்..!! 

குழந்தைகள், 
அழுவதை கூட 
இசையாய் மாற்ற தெரிந்த 
பளிங்கு பல்லவிகள்..!!! 

குழந்தைகள், 
யாராக இருந்தாலும் என்ன..?? 
குறும்புகளுக்கு அடி பணிய வைக்கும் 
குட்டி சர்வாதிகாரர்கள்...!! 

குழந்தைகள், 
சின்ன விரல்களில் அழகு காட்டி 
சொத்துக்களை எழுதி தர வைக்கும் 
ஒன்றுமறியா புத்திசாலிகள்..!!! 

குழந்தைகள், 
தாய்க்கு குழந்தையாகவும், 
அதே தாய்க்கு தாயாகவும் தெரிகின்ற 
தெய்வ பிறவிகள்...!!