www.gamblinginsider.ca

01 June 2013

நண்பன் மட்டுமே நமக்கு எதிரி...!!!!

நண்பனென்றால் எப்போதும் 
நம்மை போலவே நமக்காக மட்டுமே 
இருக்க வேண்டுமென்பது தான் 
எல்லோரின் ஆசையும்..!! 

அவன் நல்ல ஆடை அணிந்தால் 
முதலில் பாராட்டுவதும், 
மனதில் திட்டுவதும், 
நாமாகவே இருப்போம்..!! 

பெண்களிடம் அவன் பேசினால் 
கோவம் கலந்த பொறாமையும் 
மனதில் ஏமாற்றமும் 
முதலில் நமக்கே..!! 

அவன் பாராட்டும்படி என்ன செய்தாலும் 
முதலில் கை குலுக்கி கட்டிபிடித்து 
அவன் காதில் ரகசியமாக 
உண்மையிலே இது நீ தானா..?? 
என அதிர்வதும் நாம் தான்..!! 

அவனை பற்றி பெருமையாக பேச 
எப்போதுமே மனம் வராது..!! 
அவன் விடுமுறை என்றால் 
அவனை பற்றி பேசாத 
நிமிடங்களே இருக்காது..!! 

அவனுக்கு துன்பம் எனில் 
உதவிய நிமிடங்களை விட 
நட்பு பொய்யில்லை என நாம் 
நிரூபித்த நிமிடங்களே அதிகம்..!! 

ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு 
அறிவுரைகள் அவனுக்கு சொல்லி 
அதில் ஒன்றை பற்றி கூட 
யோசிக்காமல் இருப்பதும் நாம் தான்..!! 

நண்பன் என்பவன், 
எப்போதும் உடனிருக்கும் 
நல்ல நண்பனாகவும், 
முன்னேறிவிட்டால் 
சிறந்த எதிரியாகவும், 
நம் வாழ்க்கையில் 
சரியான போட்டியாளனாகவும், 
வெற்றி பெற்றால் 
திட்டி பாராட்டும் ரசிகனாகவும், 
தோல்வி என்றால் 
தோளில் தட்டி கை கொடுக்கவும், 
தேவைப்படுகிற மனசாட்சி அவன்...!!