31 December 2012
தினம் தினம் புத்தாண்டு தான்....!!!
நாம் ஏன் பிறந்தோம் என்பதே
கேள்விக்குறியாக இருக்கும்போது,
புத்தாண்டு பிறப்பதை எண்ணி
பெருமகிழ்ச்சி கொள்ளாதே..!!!
பத்தோடு பதினொன்றாக
பூமியில் வாழாதே..!!
சிறந்த பத்து பேரில்
நீ வர தவறாதே....!!
உன் வழியில் நீ திரும்பாமல் இருந்தால்,
உலகம் உன்னை திரும்பி பார்க்கும்..!!
தொலைபேசியில் நேரம் கழிப்பதற்கு,
தொலைநோக்கு பார்வையில் நேரம் செலுத்து,..!!
உனக்கு பிடித்த வாழ்க்கையில்
நீ வெற்றி அடைகிற,
ஒவ்வொரு நாளும் உனக்கு
புத்தாண்டு தான்...!!!
சாதாரண மனிதனாய் வாழ்வதை விட
சாதனை மனிதனாய் வீழ்வது மேல்..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
29 December 2012
என் நண்பேன்டா....!!!!!
உன்னை நான்,
கட்டியும் அணைக்கலாம்,
எட்டியும் மிதிக்கலாம்...!!
உன்னிடம் நான்,
அன்பும் காட்டலாம்,
அடியும் வாங்கலாம்..!!!
உனக்கு நான்,
சாய்ந்து கொள்ள தோளும் கொடுக்கலாம்,
தொல்லையும் கொடுக்கலாம்..!!
உன்னோடு நான்,
விளையாடவும் செய்யலாம்,
விலகி போகவும் துடிக்கலாம்..!!!
உனக்காக நான்,
பெருமையும் படலாம்,
அவமானமும் அடையலாம்..!!
உன்னை நான்,
நண்பனாகவும் ஆக்கலாம்,
விரோதியாகவும் மாற்றலாம்..!!
உன்னுடன் சேர்ந்து,
சிரிக்கவும் செய்யலாம்,
அழவும் செய்யலாம்..!!!
உன் காதலை நான்,
சேர்த்தும் வைக்கலாம்,
செருப்பிலும் அடிக்கலாம்..!!!
உனக்கு நான்,
உயிரையும் கொடுக்கலாம்,
உயிரையும் எடுக்கலாம்..!!!
இப்படியாக,
உன்மேல் உள்ள என் காதலிடம்
என் காதலியும் தோற்று விடுவாள்..!!!
ஏனெனில் நீ என்,
நண்பேன்டா....!!!!!
Labels:
நட்பு கவிதைகள்
28 December 2012
அவளின் ரசிகன்...!!!

உன்னை ரசிக்கும்
ரசிகன் நான் என்றால்,
உனக்கு தெரிந்தே
உன்னை விமர்சிக்கும்
விமர்சகனும் நான் ஆவேன்..!!!
Labels:
காதல் கவிதைகள்
அத்தை மகளுக்கு கல்யாணம்..????
http://eluthu.com/kavithai/98520.html
அத்தி மர நிழலிலே
அத்தை மக கூட,
ஓடி புடிச்சு விளையாடும் போதே
இவள தான் நீ கட்டணும்ணு
சொல்லி சொல்லி வளத்தாக...!!!
சின்ன வயசுலேயே அவ
என்னைய பாத்துட்டு வெறிச்சு ஓட,
ஒன்னும் புரியாம நான் நிக்க,
அப்போ தெரியல
அதுதான் காதலுன்னு...!!
ஒருநாள் கோடை மழை கோவத்துல
கொட்டி தீக்க,
பயந்துபோய் அவ என்னைய
கட்டிபுடிக்க,
அறியாத வயசுலேயே
என் சிறு நெஞ்ச அவ ஆட்டி வச்சா...!!
நட்டு வச்ச செடியில சட்டென
ஒத்த பூ பூத்த போல,
அத்தை மக ஒருநாள்
குத்த வைக்க,
ஊரெல்லாம் ஒரே குலவை சத்தம்...!!!
மாமன்மகன் நான் குச்சு கட்ட,
குனிஞ்சு கிட்டே உள்ள வந்தா
என் அத்தை மக..!!!
சும்மாவே சிவப்பான அவ
என்ன பாத்ததும் இன்னும் சிவக்க
வெக்கத்துல நான் நின்னே...!!!
தாய்மாமன் சீர் தான்னு
ஊர் சொல்லி கொண்டாடனும்னு,
வண்டி கட்டி கொண்டுவந்தேன்
தட்டு தட்டா தங்கத்துல சீர்..!!
கொடுத்து வச்சவ அவ தானேன்னு
கன்னத்துல சந்தனம் வைக்க,
நான் மயங்கிப்புட்டேன்...!!!
அப்போது பெரிய மனுசங்க ஆனது
நாங்க மட்டுமில்ல,
எங்க கண்மூடித்தனமான
காதலும் தான்னு யாருக்கும் புரியல...!!
ரொம்ப பாசமா நாங்க
காதலிலே பறந்து
வானத்துல வட்டம் போட்டோம்,..!!
யார் விட்ட சாபமோ..??
வாய்க்கால் சண்டையில
எங்க குடும்பம் பிரிஞ்சு போக,
நாங்க மட்டும் என்ன சொல்ல,
எங்க காதல் மட்டும் நின்னுச்சு
மண்ணுக்குள்ள போன மண் வாசம் போல..!!
யாரோட ஆசையோ இது,,??
நெஞ்சுல இறங்குன இடி மாதிரி,
என் காதுல சொன்னாங்க ஒரு சேதி,
உன் அத்தை மகளுக்கு
கல்யாணமாம்..!!!
ஓடி போய் என் மாமன் கிட்ட,
எங்க காதல் கதை சொல்ல,
அவரோ வாய்க்கால் பிரச்சினைல
இத காது கொடுத்து கேக்கல..!!
என்ன கட்டிகிட்டா,
செத்துடுவேன்னு என் அத்தை சொல்லி வைக்க,
என் நெஞ்சுல நஞ்ச பாய்ச்சி
அவ சொன்னா ஒத்த வார்த்த
என்னைய மறந்துருங்க..??
உன்ன காதலிச்சுருந்தா
சுலபமா நான் மறந்துடுவேன்..!!
உன் கூட நான் வாழ்ந்துகிட்டு இருக்கேனே
எப்படி மறக்க...???
கண்ணீரோட நான் சொன்னே,,
நம்ம காதலை பிரிச்ச வாய்க்காலுக்கு
எங்கே தெரிய போகுது..,,
நான் உன் மேல வச்ச காதலின் ஆழம்...!!!
Labels:
காதல் கவிதைகள்
26 December 2012
போனால் போகட்டும் போடா????

நாட்களை எண்ணி
என் நாள்காட்டி கரைந்து போனது,
உன்னிடம் பேசாத
நிமிடங்களை எண்ணி
என் கடிகாரம் தேய்ந்து போனது,
உன்னை நினைத்து பார்க்காத
நினைவுகளை எண்ணி
என் காலம் நொந்து போனது,
உனக்கு கடிதம் எழுதாமல்
இருப்பதை எண்ணி
என் பேனா உறைந்து போனது,
உன்னை வர்ணிக்காத
வார்த்தைகளை எண்ணி
என் நாக்கு மெலிந்து போனது,
எல்லாம் என்னை விட்டு போக துடிக்க,
உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு போகாமல்
உயிரை எடுப்பது தான் விதியா??
சட்டென உன் நினைவுகளை,
பட்டென என்னால் மறக்க முடியாது
என்பது உனக்கு மட்டுமே
தெரிந்த உண்மை..!!
உன்னை ஏமாற்ற விரும்பாத நான்,
அந்த பொய்யை உண்மையாக்கி
தனித்து நிற்கிறேன்,
என் நிழலும் என்னை விட்டு போனதால்...!!!
25 December 2012
அவளின் நகலும்,நிழலும்.....!!!!
http://eluthu.com/kavithai/98008.html
உன்னை பார்த்த பின்பு,
நான் பார்க்கும் எல்லாம்
உன் நகலாகவே தெரிவது தான்
உன் சூழ்ச்சியா???
இல்லை அதுதான்
என் வீழ்ச்சியா???
கேள்விகள் பல நீ கேட்க,
எதுவும் புரியாமல் நான் நிற்க,
தலையில் தட்டி நீ சொல்கிறாய்
சரியான கிறுக்கன் நான் என்று..!!!
குறுகிய இடைவெளியில்
என் மனம் செல்கையில்,
இதுதான் பாதை என கைகாட்டி
வந்த வழியே நீ சென்று விட்டாய்..!!
நான் தனியே எந்த வழி செல்வது..??
உன் அனுமதியின்றி உன் நிழலுடன்
பேசிகொண்டிருக்கையில்,
ஒரு உண்மை தெரிந்தது..!!
உன்னை விட உன் நிழலையே
காதலிக்கலாம் என்று..!!!
Labels:
காதல் கவிதைகள்
அ முதல் ஓ வரை....!!!!
http://eluthu.com/kavithai/98004.html
அழகிய உன் இதயத்தை
ஆள்வதற்கு தவம் இருக்கிறேன்..!!!
இனியும் ஒருவன் வரப்போவதில்லை
ஈடு இணை எனக்கு எவனுமில்லை..!!
உலகறிய உன்னை தூக்கி செல்கையில்,
ஊர் கூடி வந்தாலும் கவலை இல்லை...!!
எத்திசையில் நீ இருந்தாலும் உன்னை
ஏந்தி செல்ல ஓடோடி வருவேன்..!!!
ஐயம் வேண்டாம் அன்பே,
ஒரு மாறாத உண்மை - என்றும் நாம்
ஓர் உயிராகவே இருக்கிறோம்..!!!
Labels:
காதல் கவிதைகள்
24 December 2012
அகராதி பெண் !!!!!!!
http://eluthu.com/kavithai/97889.html
ஆயிரம் அர்த்தங்களை கொண்ட
அகராதியும் திணறிப்போனது...!!
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அர்த்தங்களை தேடி..!!!
அர்த்தமில்லாத வார்த்தைகளின்
அகராதி அவள் மட்டுமே...!!!
Labels:
காதல் கவிதைகள்
பொய்யும் உண்மையும்...!!!!
http://eluthu.com/kavithai/97892.html
காதலித்தால் மட்டுமே,
கவிதை வரும் என்பது பொய்..!!!
காதலை வெறுத்தாலும்
கவிதை வரும் என்பது உண்மை...!!!
Labels:
காதல் கவிதைகள்
21 December 2012
சிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்.....
ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் "அழகானது" என்பதாகும்.
மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.
சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.
சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.
சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.
சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.
சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.
புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.
தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.
உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.
ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.
மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.
சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.
சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.
சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.
சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.
சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.
புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.
தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.
உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.
ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.
சத்தியமா உலகம் அழியாதுங்க..!!!!
http://eluthu.com/kavithai/97515.html
நண்பன் என்னை பார்க்க வரும் வரை
என் உலகம் அழியாது..!!!
அடுத்த வருடம் சந்திக்கிறேன் என்று
சொல்லி நண்பன் என்னை பிரிந்தவுடன்,
"உலகம் அழிவதில்"எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது..!!
Labels:
நட்பு கவிதைகள்
18 December 2012
என்னை தேடி வந்த பட்டாம்பூச்சி....!!!

என் வாழ்க்கையின் பக்கங்களுக்கு,
வண்ணங்களை தெளிக்க
பட்டாம்பூச்சியாய் வந்தாள் அவள்..!!!
ஒருவேளை முன்ஜென்ம பந்தமோ.??
பார்த்தவுடன் என் கைகளில்
வந்து அமர்ந்து வண்ணம் பூசியது அந்த
பட்டாம்பூச்சி...!!
எல்லோருக்கும் இது கிடைக்குமா??
அவளின் சின்ன இதயத்தில்
எனக்கு மட்டும் அவ்வளவு பெரிய இடம்...!!
யார் செய்த சூழ்ச்சியோ..??
சந்தித்த மறுகணமே,
என் பட்டாம்பூச்சியை பிரிய வேண்டிய
சபிக்கப்பட்ட நேரம்..!!!
பார்க்காமலே எங்கள் உறவு வளர்ந்தது போல,
என்னை பார்த்தவுடன் பட்டாம்பூச்சிக்கு
இன்னும் சில வண்ணங்கள் பிறக்கும் என
என் மூடநம்பிக்கையும் கூடவே வளர்ந்திருந்தது...!!
என் பின்னே என் நிழல்
வருமா என்று தெரியாது.??
என் பட்டாம்பூச்சியின் நினைவுகளும்,
வண்ணங்களும் என்னுடன் வரும்
நிழலாக அல்ல உயிராக..!!
எனக்கு ஆறுதல் தர வந்த அவளுக்கு,
நான் ஆறுதல் சொன்ன நிமிடங்களே அதிகம்..!!
சிறு இதயம் தானே அவளுக்கு,
இதய துடிப்பின் சின்ன வலியையும்
தனக்குள் மறைக்க தெரியாத
குழந்தை அவள்...!!!
குறும்புகளின் ராணி என் பட்டாம்பூச்சி,
எப்போதும் விளையாடி கொண்டே இருப்பாள்
யார் சொன்னார்களோ பொய் அழகென்று,
நிறைய பொய்களை உண்மையாக சொல்வாள்..!!
அவளுக்கு பல நிறங்கள் போல பல முகங்கள்..
எப்போதும் புன்னகை செய்வாள்,
சட்டென கோவப்படுவாள்,
கோவத்தில் முகம் சிவந்து
புது வண்ணம் பிறக்கும் போது,
தன் கண்ணீர் வைத்தே வண்ணம் அழித்து விட்டு
மீண்டும் சிரிப்பாள்...!!
கண்ணாடி தானே என் பட்டாம்பூச்சி..!!
சிறு தூசியும் அவளை,
நூறு பிம்பங்களாக உடைத்து விடும்..!!
தேவதையின் நகல் என் பட்டாம்பூச்சி..!!!
நிலவும் பார்க்க ஆசைப்படும்,
பூக்கள் தினம் ஒற்றை காலில் நிற்கும்,
இன்னும் அவளை பற்றி
சொல்லிக்கொண்டே போகலாம்..!
எதுவும் பிடிக்காத அவளுக்கு,
எனக்கு பிடித்த சிலவற்றை
தனக்கும் பிடிக்கும் என சொல்லி
என்னையே வென்று விட்டாள்..!!!
என் பட்டாம்பூச்சியை,
பார்த்தவுடன் வியந்தேன் அச்சோ...!
வியப்பில் நின்றது என் மூச்சோ..!!
இப்போது அழகாய் மாறியது என் பேச்சோ...!!!
இதுபோதும்,
இப்போது நானும் பறக்கிறேன்,
இன்னும் பறப்பேன்..!!
தனியாக அல்ல,
என்னை தேடி வந்த என் பட்டாம்பூச்சியுடன்..!!
Labels:
காதல் கவிதைகள்
17 December 2012
என்ன தவமோ???
http://eluthu.com/kavithai/96992.html
உன் கூந்தல் மட்டும்
என்ன தவம் செய்தது,
எப்போதும் தாலாட்டிகொண்டே
இருக்கிறாயே...????
Labels:
காதல் கவிதைகள்
நானும் என் கடிகாரமும்...!!!
http://eluthu.com/kavithai/96994.html
உனக்காக நான் காத்திருப்பேன்
என் வாழ்நாள் முழுவதும்...!!
ஆனால்,
என் கடிகாரம் உனக்காக
ஒருபோதும் காத்திருக்காது...!!
Labels:
காதல் கவிதைகள்
நகரத்தில் வராத விடியல்..???
http://eluthu.com/kavithai/96989.html
சொர்க்கமாக மாற நினைத்து
சொர்க்கமாக மாற நினைத்து
நரகமாக மாறி வரும்
நகரங்களின் நிலைமை...!!!
எப்போதும் ஓய்வில்லாத சாலைகள்,
எதையோ தேடி அலையும் பேருந்துகள்,
கண்ணீர் புகை தரும் வாகனங்கள்..!!!
ஆட்டோவில் செல்வதற்கு
கடன் தர காத்திருக்கும் வங்கிகள்,
சேர்த்த பணத்தை வாரி சுருட்ட
வந்திருக்கும் முகமூடிய கருப்பு ஆடுகள்.
உலகத்தை ஒரு ஏக்கருக்குள்
கொண்டு வந்த நில அதிபர்கள்,
சோறு போட்ட வயலையும்
கூறு போட்டு விற்ற முதலாளிகள்.
நோயை தரும் துரித உணவகம்,
நேரத்தை கொன்ற சினிமா கலையரங்கம்,
கலாச்சாரம் வளர்க்க இரவு விடுதிகள்,
தன்னையே தொலைக்க ஆன்மீக உறவுகள்.
யாரை பற்றியும் கவலைபடாத மக்கள்,
தூங்கிகொண்டிருக்கும் நியாய பக்கங்கள்,
சாதாரணமான மனித கொலைகள்,
சாகதுடிக்கும் நம் முதிய தலைகள்.
இந்த நரகத்திற்காக,
சூரியன் தினம் வந்துவிடும்,
நிலவும் தன் முகம் காட்டிவிடும்,
காற்றும் தன் பங்கு கடமையை செய்துவிடும்,
மழையும் இவற்றை எண்ணி அழுதுவிடும்,
ஏனோ தெரியவில்லை
இவைகளுக்குக்கான விடியல் மட்டும்
இன்னும் தேடி வரவில்லை...!!!
Labels:
சமுதாய கவிதைகள்
15 December 2012
அம்மாவின் அவதாரம்...!!!!
http://eluthu.com/kavithai/96672.html
எனக்கு இந்த பூமியை காண்பிக்க,
நீ எடுத்த மறு அவதாரம்,
அம்மா...!!!
எத்திசையில் இருந்து புயல் வந்தாலும்,
துன்பங்கள் உன்னை சூழ்ந்து நின்றாலும்
பரவாயில்லை என
உன் அன்பை தந்து என்னை பெற்றெடுத்(தாய்)..!!
நான் பிறக்க நீ பிறந்தாய்,
நான் தவழ நீ தவழ்ந்தாய்,
நான் நடக்க நீயும் நடந்தாய்,
நான் சிரித்தால் சிரிப்பாய்,
நான் அழுதால் நீ கண் கலங்குவாய்,
என எல்லாமுமே நானாக நீ இருந்தாய்..!!!
என்னை அழகாக்கி பார்ப்பதிலே
உன் நிலை மறந்தாய்..,
என்மேல் கண்பட்டுவிடாமல் இருக்க
உன் கண் மை கொண்டு காத்துநின்றாய்...!!
என் தவறுகளை பொறுப்பாய்,
பொறுமை கொண்டு பின் அடிப்பாய்,
அடித்த பின் முத்தம் பல தருவாய்,
உன் முத்தம் வாங்கவே
நான் செய்த தவறுகள் பல....!!!
எனக்கு எது பிடித்ததோ,
அதையே தனக்கும் பிடித்ததாக்கி
கொள்வது அவளின் பெருந்தன்மை..!!!
நான் பிறந்து "அம்மா" என்று
ஒருமுறை அழைப்பதற்குள்,
அவள் என்னை மகனே,மகனே என்று
மூச்சுகாற்றிற்கு பதில் என்னை சுவாசித்தாள்...!!
அவள் என்னை பிரிந்து இருந்ததில்லை,
என்னை யாரிடமும் விட்டு கொடுப்பதில்லை,
எத்தனை கடல் தாண்டி சென்றாலும்,
நான் இருப்பதென்னவோ அவளின்
கண்ணீருக்குள் தான்...!!!!
இவ்வளவு செய்த உனக்கு,
நான் என்ன செய்ய முடியும்,,???
நீ முதுமை என்னும் குழந்தை பருவம் வா..!!!
உன்னை தாலாட்டி தூங்க வைக்க
நான் எடுக்கிறேன் "தாய்" அவதாரம்..!!!
Labels:
அன்பு கவிதைகள்
10 December 2012
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு...!!!
சிறுவயதில் யாரோ கேட்டார்கள்
உனக்கு யாரை பிடிக்கும் என்று,
தயங்காமல் என் உதடுகள் சொல்லியது
உனக்கு யாரை பிடிக்கும் என்று,
தயங்காமல் என் உதடுகள் சொல்லியது
உங்கள் பெயரை(ரஜினி) மட்டுமே...!!!
முதலில் எழுத பழகும் போது
'அ' என்றே அறிமுகம் செய்தனர்...!
தெரிந்திருந்தால் உங்கள் பெயரை(ரஜினி)
முதலில் எழுதியிருப்பேன்
என் உயிரெழுத்தாக...!!!!
அறிவியல் கற்று தராத "காந்த விசையை"
உங்கள் பெயர்(ரஜினி)
சொல்லும் போதும்,கேட்கும் போதும்,
கற்று கொள்கிறேன்...!!!
நான் உங்களை(ரஜினி) கடவுளாக என்றுமே
பார்க்கமாட்டேன்....!!!
ஏனென்றால்
கடவுளை இந்த உலகம்
கல்லாக மட்டுமே பார்க்கிறது..!!!
இன்னும் உங்களில்(ரஜினி) மறைக்கப்பட்ட
(அறிவியல்)உண்மைகள் எத்தனையோ...???
முதலில் எழுத பழகும் போது
'அ' என்றே அறிமுகம் செய்தனர்...!
தெரிந்திருந்தால் உங்கள் பெயரை(ரஜினி)
முதலில் எழுதியிருப்பேன்
என் உயிரெழுத்தாக...!!!!
அறிவியல் கற்று தராத "காந்த விசையை"
உங்கள் பெயர்(ரஜினி)
சொல்லும் போதும்,கேட்கும் போதும்,
கற்று கொள்கிறேன்...!!!
நான் உங்களை(ரஜினி) கடவுளாக என்றுமே
பார்க்கமாட்டேன்....!!!
ஏனென்றால்
கடவுளை இந்த உலகம்
கல்லாக மட்டுமே பார்க்கிறது..!!!
இன்னும் உங்களில்(ரஜினி) மறைக்கப்பட்ட
(அறிவியல்)உண்மைகள் எத்தனையோ...???
Labels:
அன்பு கவிதைகள்
08 December 2012
எழுதப்படாத காதல் கடிதம்...!!!
http://eluthu.com/kavithai/95847.html
Email ஐ முற்றிலும் துறந்தேன்,
facebook ஐ விட்டு தூரம் சென்றேன்,
sms என்றால் என்னவென்று கேட்டேன்,
அவள் எனக்கு எழுத்தில்லாமல் எழுதிய
காதல் கடிதம் பார்த்ததிலிருந்து....!!!!!
Email ஐ முற்றிலும் துறந்தேன்,
facebook ஐ விட்டு தூரம் சென்றேன்,
sms என்றால் என்னவென்று கேட்டேன்,
அவள் எனக்கு எழுத்தில்லாமல் எழுதிய
காதல் கடிதம் பார்த்ததிலிருந்து....!!!!!
Labels:
காதல் கவிதைகள்
04 December 2012
இயற்கை சீற்றம் என் காதலி மேல்..!!!

நான் இருக்கிறேன்...!!!
ரோஜாக்கள் நீ மட்டுமே சூட எண்ணி
போராட்டம் நடத்தலாம்..!!
உன் காலடி தடம் பார்க்க
பேருந்து நிறுத்தங்கள் தவம் புரியலாம்...!!
உன் குரல் கேட்டு தொலைபேசியும்
உனக்கு காதல் சொல்லலாம்..!!
நீ தினமும் நடப்பாய் என
கற்கள் கூட மெத்தை அணியலாம்.!!
முதலில் உன்னை பார்ப்பதற்காக
சூரியனே நிலவை கொல்லலாம்..!!
உன்னை மகிழ்விக்க வானவில்,
நிறங்களை கொஞ்சம் சேர்க்கலாம்..!!
நீ உண்ணும் போது அழாமல் இருக்க
காரமும் தன்னை இனிப்பாக்கலாம் ..!!
உன்னை திரும்பி பார்க்க வைக்க
நெருப்பும் தலைகீழ் சாகசம் செய்யலாம்..!!
உன் அழகின் மேலே பொறமை கொண்டு
வண்ணத்துபூச்சிகள் சாபமிடலாம்..!!
எது எப்படியோ,
நான் இருந்து,
என்னுயிர் தந்து,
உன்னை மீட்பேன் -இந்த
இயற்கையின் அளவில்லா
(சீற்றம்)காதலில் இருந்து...!!!
Labels:
காதல் கவிதைகள்
01 December 2012
அவள் வீட்டு கண்ணாடிகள்...!!!
http://eluthu.com/kavithai/95153.html
உலக அழகியானது
உன் வீட்டு கண்ணாடி..!!
நீ முகம் கழுவிய நொடிகளில்
சிதறிய சிரிப்புகளையும்,
கிள்ளிய முகபருக்களையும்,
வெக்கத்தின் பிம்பங்களையும்,
உன் அனுமதியின்றி திருடி
தன்னை அழகியாக்கி விட்டது..!!
நீயோ சத்தமில்லாமல்,
அடுத்த உலக அழகியை
உருவாக்க போய்விட்டாய்..!!!
Labels:
காதல் கவிதைகள்
பொய்கள் பிறந்த கதை...!!!
http://eluthu.com/kavithai/95149.html
உன்னை வர்ணிக்காத
வார்த்தைகள் மட்டுமே,
மீண்டும் பிறக்கின்றன
பொய்யான வார்த்தைகளாக...!!!
Labels:
காதல் கவிதைகள்
நான் பார்த்த உலக அதிசயம்...!!!
.jpg)
உன்னை தினமும்,
பார்த்து கொண்டிருப்பதால் தான்
என்னவோ....!!!!
நான் உலக அதிசயங்களை
நம்ப மறுக்கிறேன்...!!!
Labels:
காதல் கவிதைகள்
30 November 2012
புதிய மனிதா பூமிக்கு வா..!!
http://eluthu.com/kavithai/95015.html
என்றோ ஒருநாள் நடக்கும்
நீ கண்ட கனவுகள்..!!!
வாழ்க்கையின் தூரங்களை,
சுடு பால் கண்டு அஞ்சி நிற்கும்
பூனை போல் அல்லாமல்,
பாய்ந்து கடக்க துடி..!!!
எத்தனை துயரங்கள் தேடி வந்தாலும்
அதை தலை குனிந்து ஏற்று கொள்,
உனக்கு வாய்க்க பெற்ற வரமாக..!!!
எதிரிகள் உன்னை சாபமிட்டு
அழிக்க பார்க்கலாம்,
நிமிடங்கள் உன்னை விட்டு
கடந்து போகலாம்,
வாய்ப்புகள் வாசல் வரை வந்து
கையசைத்து செல்லலாம்,
எது நடந்தாலும் உனக்கென்ன என்று
அமுக்கி வைத்த ஆலமர விதையாய் இரு..!
ஒருநாள் நீயும் வருவாய்..!!!
உன்னை மிரட்டிய வரிகள்
ஒருநாள் உன் அடி பணியும்,
உனக்கு ஆறுதல் தந்த வார்த்தைகள்
உன்னால் பெருமை கொள்ளும்.
நீ ஏறிகொண்டிருக்கும் ஏணியை,
யார் வேண்டுமானாலும் உடைக்கலாம்..
பயப்படாதே..!!
உலகின் கடைசி சென்றாவது,
உனக்கென ஒரு பாதை போட்டால்
உன் பின்னால் வருவார்கள்
ஏணியை உடைத்தவர்கள் ..!!
வாழ்வதற்கு நாட்களை எண்ணாமல்,
சாவதற்கு நீ துணிந்து விட்டால்
விதி கூட உன்னை தொட மறுக்கும்..!!!
புதிய மனிதா
உனது பூமிக்கு வா..!!!
உனக்காக வரலாற்றின் பக்கங்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன,
உன் பெயரை சுமப்பதற்கு...!!
ஆயிரத்தில் ஒருவன்..!!!!

பேருந்தில் ஒரு தாய்-தான்
அமர இடம் கேட்டு கேட்டு ஏமாந்து,
அதை நான் தந்த போது...!!!!!
Labels:
சமுதாய கவிதைகள்
29 November 2012
கண்ணீர் விட்ட வானம்...!!!

சோகத்தில் மூழ்கியவுடன்....
சிரிக்க மட்டுமே தெரிந்த என் வானம்,
அழ தொடங்கியது
உன் கண்ணீர் துளிகளை கரைப்பதற்காக..!!!!
Labels:
காதல் கவிதைகள்
முரண்பாடு..!!!

என போராட்டம் நடத்திவிட்டு,
பாலிதீன் உடை அணிந்த-அந்த
மரக்கன்றுகளை மகிழ்ச்சியுடன் புதைக்கிறார்கள்,
இந்த மண்ணின் மைந்தர்கள்..??
Labels:
சமுதாய கவிதைகள்
28 November 2012
சிவப்பு ...!!!!
.jpg)
இந்த வார்த்தையில் என்னவோ இருக்கிறது,
வண்ணத்தில் தனிமையாகவும்
சாலையில் அபாயமகவும்
வறுமையின் முகவரியாகவும்
புரட்சியின் அடையாளமாகவும்
இன்பத்தில் விளக்காகவும்
உனக்கு இத்தனை முகங்களா??
Labels:
கற்பனை கவிதைகள்
பேஸ்புக்..?
http://eluthu.com/kavithai/93552.html
முகம் தெரியாத "அவனை"
"அவள்"என்று நினைத்து
காதல் சொல்ல வைத்த
விஞ்ஞான திருடன்...!
Labels:
சமுதாய கவிதைகள்
ஆற்றில் போடப்படும் தர்மங்கள்...!!!!
http://eluthu.com/kavithai/94625.html
கை கட்டி நிற்பவனுக்கு கோடிகளையும்,
கையேந்தி கேட்டவனுக்கு கோவத்தையும்
அள்ளி அள்ளி கொடுக்கும் ஆச்சரியமானவர்களே..!!
ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடுவேன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உள்ளங்களே..!!!
இறைவனுக்கு
வறுமை இல்லை,
பசியும் இல்லை,
எனவே பணமும் தேவை இல்லை..!!
ஆற்றில் போடுவதே தவறு-இதில்
அளந்து தான் போட்டேன் என்று சொன்னால்
என்னவென்று கருதுவது...????
இல்லாதவர்க்கு அள்ளி கொடுங்கள்
சிவந்த உன் கைகளை காண
இறைவனும் இறங்கி வருவான்..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
தொலைந்து போன கடிதங்கள்...???
http://eluthu.com/kavithai/94506.html
அன்புள்ள என ஆரம்பித்து
நலம் நலமறிய ஆவல்...!!!
என மகனுக்கு கடிதம் எழுத தொடங்கும் போதே
இனமறியா சந்தோசம் தாயின் மனதில்..
நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்
உன் உடம்பை பார்த்துகொள்..
நல்லா சாப்பிடு,,
எங்கள பத்தி கவலை வேண்டாம்..
இந்த வருடம் நல்ல மழை
செடிகள் நல்லா வளர்ந்துருக்கு..
நீ அனுப்பிச்ச பணத்துல தான்
உரம் வாங்கி விதச்சோம்
ஆடு ஒரு குட்டி போட்டுள்ளது
உன் பெயர் தான் குட்டிக்கு வச்சுருக்கோம்
நல்லா வெள்ளையா அழகா இருக்கு.
நீ வரும் போது பெரிசாயிடும்..!!
இந்த வருடம் ஊர்ல திருவிழா,
மதுரை கரகாட்டம் வருது
உனக்கு புடிச்ச ரெகார்ட் டான்ஸ்
நிகழ்ச்சி கூட போடுறாங்க..!!
அப்புறம் பாப்பா இந்த வருடம்
பத்தாவது வகுப்புக்கு போறா,
புத்தகம் வாங்க அடுத்த முறை
சேர்த்து பணம் அனுப்பி விடு...
இப்படிக்கு உன்னை காணமல்
தினமும் வாடிக்கொண்டிருக்கும்
அம்மாவும்,அப்பாவும்..
இப்படி குலைந்து குலைந்து
கடிதம் எழுதிய காலம்
தொழில்நுட்ப வளர்ச்சியில்
தொலைந்து தொங்கி நிற்கிறது...
தபால் பெட்டியின் நினைவுகளை
அழிக்க வந்த நவீன கொலைகாரனாக,
"குறுந்தகவல்"மட்டும் விரல்களில்...???
Labels:
சமுதாய கவிதைகள்
என்னை விட்டு விடு...!!!
http://eluthu.com/kavithai/94747.html
விழிகளிலே உன் நினைவுகளை,
புதைப்பது போல் உணருகிறேன்.
உனை மறக்க
உன் நினைவிழக்க
இறப்பதற்கு துணிகிறேன்.
வேண்டாம் கொடுமை,
மின்னலே என்னை விட்டு விடு....!!
உன்னை நான் வர்ணித்த வரிகளை
திருப்பி தந்து விடு...,
என் தேவதையே,
முன் பனித்துளியே,
வானவில்லே,
வால் நட்சத்திரமே..!!!
என் இதய துடிப்பையும்
உனக்கு கடன் தருகிறேன்
என்னை தொலைத்து விடு...!!
உன்னை விட்டு
போக துணிந்த எனக்கு,
நீ தந்த சுவடுகள்
ஆணியறைந்த இதயம்,
நசுக்கப்பட்ட பூக்கள்,
கண்ணீர் விட்ட கடிதங்கள்,
மரித்துப்போன மணித்துளிகள்...!!!
நான் போகிறேன் அன்பே
இரவுகளை தேடி அல்ல,
நீ இல்லாத பகலை...!!!!
24 November 2012
வெள்ளை காகிதம்..!!!
http://eluthu.com/kavithai/93973.html
பள்ளி சென்று படிக்கும்
பதின்மூன்று வயது பூவுக்கு,
இரும்பினால் காப்பு செய்து
திருமணம் முடித்தனர்-அவளை
பெற்றதாய் பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள்..
திருமண பந்தம் தொடங்கும் முன்பே,
கணவரை எமனுக்கு விற்று விட்டாள்
நோயின் காரணமாக..,,,,
விளையாடிகொண்டிருந்த அவளிடம்
பூவும் பொட்டும் சண்டையிட்டு பிரிந்தது...??
வெள்ளை உடை தோழியானது...!!!
எதுவும் புரியாமல்,
சொல்லவும் முடியாமல்,
என்னவென்றே தெரியாமல்,
அந்த மழலை பூ திணறியது.
முள் வேலிக்குள் முடங்கிய பூவை,
வார்த்தை தீயினால் சுட்டார்கள்,
நான்கு விதமாய் பேசும் அந்த நால்வர்கள்...!!
என்ன வரம் வங்கி வந்தாளோ,
இப்படி ஒரு வாழ்க்கை-என
ஊர் பெரிசுகள் ஒப்பாரி வைக்க,
வரம் கொடுத்தவன் வேடிக்கை பார்த்திருந்தான்..??
யாரு செய்த பாவமோ..???
எனக்கு மகளாக வந்தாய்-என
தாய் தன் புலம்பல் விதைகளை,
ஆழமாய் விதைத்தாள்,,..!!
விளையாட வராமல் உனக்கு
என்னடி பெரிய வேலை..???
இனிமேல் உன்னுடன் பேசமாட்டோம்-என
சிறு தோழிகள் கோவமாய் தோலுரித்தனர்..!!
சோகம் புடைசூழ வந்த மாமியார்,
என் மகனை கொல்ல வந்த பாவி,
நீ நாசமாய் போவாய் என
தன் பங்கு உரையை சிறப்பாக முடித்தாள்...!!
சிலையாக உருகி நின்ற அவளை,
நிலவு மட்டுமே ஆறுதலாக பார்த்தது.
இவளும் என்னை போலவே
ஒன்றும் எழுதப்படாத "வெள்ளை காகிதம்"
யாரும் கிழித்து விடாதீர்கள்....!!!
மர்ம காய்ச்சல்...???
http://eluthu.com/kavithai/94006.html
காலை மூன்று மணிக்கு
தூக்கம் கலைந்தேன்.
திடிரென எழுந்து
சற்று தூரம் நடந்தேன்.
எங்கேயோ பார்த்து
தனியாக சிரித்தேன்.
யாரோ அழைப்பதாக
நினைத்து ஓடினேன்.
பல் துலக்க நினைத்து
சாப்பிட சென்றேன்.
சாப்பிட்டதாக உணர்ந்து
குளித்தும் விட்டேன்.
சட்டை அணியாமல்
பஸ்ஸில் சென்றேன்.
எங்கோ சென்று பாதி வழியில்
திரும்பி வந்தேன்.
எண்களை பதிக்காமல்
தொலைபேசியில் பேசினேன்.
மழை பெய்வதாக எண்ணி
வெயிலில் நனைந்தேன்.
மணிக்கு ஒருமுறை
கண்ணாடியை கண் கலங்க வைத்தேன்.
தலை சீவிச் சீவி
சீப்பை தற்கொலைக்கு தூண்டினேன்.
இதெல்லாம் எதற்கு என்று புரியாமல்,
செய்வினை என தாய் அர்த்தம் கொண்டு
சாமியாரிடம் கைதியானேன்.
தெய்வத்திடம் கேட்டு குறி சொன்ன சாமியார்
இது செய்வினை அல்ல செயப்பாட்டு வினை
இவனுக்கு மர்ம காய்ச்சல் என தீர்ப்பு எழுதினான்.
யாருக்கும் தெரியாது
இது காதல் பேயின் சதி என்று....!!!
Labels:
காதல் கவிதைகள்
கானல் நீர்..!!!
http://eluthu.com/kavithai/94222.html
ஓடிபிடித்து விளையாடிய
பள்ளி பருவத்தில்,
மிட்டாய் விற்க வந்த
பெட்டிக்கடை தாத்தா..!!!
திருவிழா காலத்தில்
பலூன் கொண்டு வந்த
தொப்பி மாமா...!!
வீதிகளில் பால்,தயிர்
தினமும் விற்க வந்த
பெரிய கம்மல் ஆயா..!!
வீடு தேடி வந்து
கையை பிடித்தாலும்,
யாரும் ஒன்றும் சொல்ல முடியாத
வளையல் விற்க வந்த அண்ணாச்சி..!!
தெருதெருவாய் அலைந்தாலும்
எப்போதும் புன்னகை மாறாமல்,
கலர் கலராக ஐஸ் கொடுத்த
சைக்கிள் அண்ணன்...!!
என எப்போதோ பார்த்த
முகங்கள் உறவுகளாய் மனதில் நிற்க..,,
சொந்த உறவுகள் மட்டும்
கானல் நீராகி விட்டது..??
யாருக்கும் தாகம் தீர்க்காமல்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)