
29 June 2013
27 June 2013
மாசில்லா உண்மைக் காதலே...!!!!
.jpg)
மெய்சிலிர்க்க செய்யும் உந்தன்
மெல்லிய கரம் தொட்டு
எந்நெஞ்சில் புகுத்திய உன் அழுத்தம்
இரும்பு திரையிட்ட இதயத்தை
திறந்து விட்டது..!!
Labels:
காதல் கவிதைகள்
25 June 2013
காசு,பணம்,துட்டு......!!!!

பணம் என்றால் பிணம் கூட
வாயை திறக்கும் போது,
பிணமாக போகும் மனிதன்
பணத்திற்கு பறப்பதில் அதிசயமில்லை..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
24 June 2013
ஆதலால் காதல் செய்வேன்...!!!!

முதல் பார்வையிலே
உன்னை செயலிழக்க செய்வேன்,
துடிக்கும் என் இதயம் வைத்து
உன் இதயம் திருடுவேன்..!!!
Labels:
காதல் கவிதைகள்
22 June 2013
பட்டிக்காடும்,பட்டணமும்...!!!!!

அழகிய கிராமத்தில் காலையில்
கோழி கூவினால் மட்டுமே
பூமிக்கு நேரம் தெரியும்,
நிலவு போகும் வரை காத்திருந்து
சூரியன் அழகாய் மலரும்,
Labels:
சமுதாய கவிதைகள்
20 June 2013
யாரடி நீ மோகினி...!!!
.jpg)
கனவுகள் அவளது ஊரானால்
இரவுகள் எனது முகவரியாகும்,
மௌனம் அவளது மொழியானால்
அமைதி எனது குரலாகும்,
புன்னகை அவளது சிறப்பானால்
ரசிப்பது எனது தொழிலாகும்..!!
அவளிடம் என்னை இழந்துவிட்டேன்
இருப்பதையும் இழக்க துணிந்து விட்டேன்
இறுதியில் இருப்பது எதுவோ தெரியாது...??
Labels:
காதல் கவிதைகள்
விண்ணை தாண்டி வருவேனே...!!!!

காதல் மேகம் கனவில் வருகிறது,
மழையாய் பொழிந்து கனவை கலைத்தது,
யாரும் இல்லாத தனிமையை
திருடி போனது,
என்னை யாரென என்னிடம்
கேட்க சொல்கிறது..??
Labels:
காதல் கவிதைகள்
18 June 2013
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்....!!!

சில நிமிடம் மனித வாழ்க்கையை
திரும்பி பார்த்தால்,
அவன் எதிர்பார்த்து ஏமாந்ததை விட
அதுவாக கிடைத்தவையே அதிகம்..!!
Labels:
வாழ்க்கை கவிதைகள்
17 June 2013
தளபதி- (நண்பனுக்கு நண்பன்)...!!

நண்பா உயிர் நண்பா
கனவில் தினம் வரும் நண்பா..!!
என்னுடன் சிரித்தாய் அழுதாய் என்றால்
ஏன் என்னை விட்டு போனாய் என் நண்பா..!!
Labels:
நட்பு கவிதைகள்
15 June 2013
தந்தையர் தினம்....!!!!

தன்னைப் பற்றி எதுவும் யோசிக்காமல்
குடும்பத்திற்காகவும்,
குழந்தைகளுக்காகவும்,
வியர்வையும் ரத்தமும்
சிந்தி உழைக்கும்,
அபூர்வ மனிதனே தந்தை...!!
Labels:
அன்பு கவிதைகள்
14 June 2013
ஆதாம் தொடங்கிய காதலின் பரிணாம வளர்ச்சி....!!!

இதற்கு தானா இவ்வளவு காலம்
காத்திருந்தது காதல்..!!
ஆதாமின் பாவப்பட்ட காதல் தொடங்கி
ஆதிவாசியின் இனம்புரியா காதல் கடந்து,
கருப்பு வெள்ளை காவிய காதல் தொலைந்து
மானே தேனே பொன்மானே என
காதலின் பரிணாமம் வளர்ந்தது..!!
Labels:
காதல் கவிதைகள்
13 June 2013
என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது...!!

என்னை நினைத்தால் எனக்கே
சிரிப்பு வருகிறது...!!
எதையோ ஒன்றை தேடித் தேடி
என்னை தொலைத்து கொண்டிருக்கிறேன்..!!
Labels:
வாழ்க்கை கவிதைகள்
12 June 2013
காதல் சொல்ல வந்தாள் என்னிடத்திலே...!!!

இன்று எப்படியாவது
தன் காதலை சொல்ல வேண்டும்
என அவனை வர சொல்லிவிட்டு
அவள் காத்து கொண்டிருந்தாள்...!!
Labels:
காதல் கவிதைகள்
11 June 2013
பாவைக்கூத்து....!!!!

உயிரில்லா பொம்மைகள்,
அதற்கு தோலில் ஆடைகள்,
உடலில் வண்ண ஓவியங்கள்,
யாரோ ஒருவன் கை ஆட்டுவிக்க
உணர்வுள்ள படைப்புகளாகி
பாவைகள் கூத்தாடுகிறது..!!
Labels:
வாழ்க்கை கவிதைகள்
08 June 2013
கருத்துச் சுதந்திரம்(படைப்பாளிகளின் குரல்)...!!
மனதில் பட்டதை சொல்ல
யாருக்கும் பயப்பட தேவையில்லை..!!
நமக்கு முழு சுதந்திரம் உண்டெனில்
நம் கருத்துக்களுக்கும்
முழு சுதந்திரம் இருக்கிறது..!!
07 June 2013
காதலன் பார்வையில் காதல்...!!!

அமைதியாக உன்னை வர்ணித்தால்
அணுக்களில் அதிர்வு..!!
சொல்ல வந்த வார்த்தை தவிக்கும்
என் காதல் சொல்ல துடிக்கும்,
தனியே துடித்த இதயம்
உன் பெயரை எழுத அழைக்கும்,
விண்ணில் பறந்து பறந்து நானும்
உன்னில் என்னை பார்ப்பேன்..!!
Labels:
காதல் கவிதைகள்
05 June 2013
சின்ன சின்ன நியாயங்கள்....!!!

சோகத்தில் கடவுள் வழிபாடு என்பது,
பொருளை தொலைத்த இடத்தில் தேடாமல்
எங்கேயோ போய் தேடுவது போல....!!
04 June 2013
என் தாத்தாவை பற்றி சொல்கிறேன்...!!!

தாத்தா உன்னை
நினைக்கும் போதெல்லாம்,
கையில் கைப்பிடியும்,
கயிறு கட்டிய கண்ணாடியும்,
ஒரு கட்டு வெற்றிலையும்,
முடிந்து வைத்த மூக்குபொடியும்,
தலப்பாகட்டு தலையும்,
நடனம் போட்ட பொடி நடையும்,
என் கண் முன்னே விரிந்து விடுகிறது..!!
Labels:
அன்பு கவிதைகள்
03 June 2013
கிழிந்த பக்கங்கள்-2 (பொய் காதல்)...!!!

உனக்காக நான் இழந்தது
என்னை மட்டுமல்ல,
என்னை சார்ந்த அனைத்துமே..!!
நம் காதலை மறைக்க
நண்பர்களிடம் கூறிய பொய்.!!
தொலைபேசியில் உன் பெயரோ
அழகிய ஆண் பெயர்..!!
கடவுளும்,காட்டு பங்களாவும்....!!!!

மனிதர்கள் கொடுக்கும்
தொல்லை பொறுக்காமல்,
வானுலகம் வாழ வழியன்றி
துன்பம் மறக்க ஓடி ஒளிந்து
ஓய்வெடுக்க இடம் தேடிய
எல்லாமறிந்த கடவுள்,
இறுதியில் பூலோகத்தின்
காட்டு பங்களாவில் புகுந்தான்..!!
Labels:
கற்பனை கவிதைகள்
01 June 2013
நண்பன் மட்டுமே நமக்கு எதிரி...!!!!

நண்பனென்றால் எப்போதும்
நம்மை போலவே நமக்காக மட்டுமே
இருக்க வேண்டுமென்பது தான்
எல்லோரின் ஆசையும்..!!
Labels:
நட்பு கவிதைகள்
கிழிந்த பக்கங்கள்-1 (பிச்சைக்காரன்)...!!

பேருந்து நிலையங்களில்
பேருந்து இருக்கிறதோ இல்லையோ,
பிச்சை எடுப்பவன் இருக்கிறான்..!!
அவனை இழிவுபடுத்த நான்
விரும்பவில்லை,
இழிவு வரக்கூடாது என்பதற்காகவே
சொல்கிறேன்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)