
29 April 2013
25 April 2013
என்ன நினைத்து மனிதரென பிறந்தோம்..!!

என்ன நினைத்து
மனிதரென பிறந்தோம்,
முன்ஜென்ம எச்சங்களின் மீதியை தேடவா...??
அல்லது மிச்ச வாழ்வின் அடிமுடி நாடவா..??
Labels:
சமுதாய கவிதைகள்
24 April 2013
கருவறை முதல் முதியோர் இல்லம் வரை...!!!

தவமாய் தவமிருந்து,
தன்னை இழக்க துணிந்து,
வரமென வரப்போகும் பிள்ளைக்கு,
கருவறையும் இருள் என யாரோ சொல்ல
கண் மூடாமல் வயிறு தடவி,
தூங்க வைத்த தாய்க்கு எப்படி தெரியும்
பின்னால் நாம் தூங்க போவது
முதியோர் இல்லமென்று...????
Labels:
வாழ்க்கை கவிதைகள்
23 April 2013
என் கவிதைக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம்...???
.jpg)
காதலியே காதலியே என் இதயக்கதை கேளாய்,
கதவில்லா மாளிகை தாழ் திறந்து நிற்பது பாராய்,
சிப்பிக்குள் விழுந்த முத்தெனவே
நெஞ்சை கிழித்து உட்புகுந்தாய் நீ...!!!
விட்டு சென்ற உன் நிழலை
கட்டி வைக்க கயிறு தேடி அலைந்து,
என்னுயிர் கோர்த்து நிற்கின்றேன் நான்...!!
22 April 2013
வலது பக்கம் இன்னொரு இதயம்..!!!

சிறுபூவே இலையொன்று தருவாயா,
அவள் இதழ் மூட வேண்டும்.
காலம் பார்க்காமல் தந்த காதலை,
இப்போதே திருப்பி கேட்கிறாள்.
சோகமின்றி சொன்ன கவிதைகளை
கடனாக்கி அன்பு செய்கிறாள்..!!!
19 April 2013
வார்த்தைகள் செய்யும் தற்கொலை...!!!

சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
அவள் சொல்லும் பொய்கள் கூட
உண்மை போல மாறிப்போவது,
அவளுக்காக வார்த்தைகள் செய்யும்
தற்கொலையே...!!
Labels:
காதல் கவிதைகள்
16 April 2013
அனாதையான கடவுளும்,சிறு குழந்தையும்...!!!
.jpg)
ஊரே சத்தமின்றி உறங்க
முற்படும் போது,
சிறு குழந்தையொன்று கூக்குரலிட்டு
தேம்பி தேம்பி அழ தொடங்கியது..!!
15 April 2013
அழிவில்லா குழந்தை-- முகநூல்(facebook )

முகநூல்,
எல்லோரையும் அடிமைபடுத்திய,
விஞ்ஞான தாயின்
மற்றுமொரு அழிவில்லா குழந்தை..!!
முகநூல்,
ஒரு முகம் அல்ல,
ஒப்பனைகளுடன் ஓராயிரம் முகம் கொண்ட
முகமூடி போட்ட திருடன்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
வேறு என்ன பாவம் நீ செய்தாய்...??

சாதாரண மனிதனாய் பிறந்ததை தவிர
வேறு என்ன பாவம் நீ செய்தாய்..??
எல்லோரை போலவே நீயும்
இருக்க வேண்டும் என்பதில்லை..!!
பணமென்ற ஒன்றுக்கு,
பிணமும் வாய் திறக்கும் போது
நீ வெறும் மனிதன் தானே..!!
13 April 2013
நண்பனே..!!பொல்லாத காதல் நமக்குள் வேண்டாம்..!!

நண்பா நண்பா புரிந்து கொள்,
நாம் இருவரும் நண்பர்களே..!!!
நண்பா நண்பா தெளிந்து கொள்,
நாம் இருவரும் காதலர்களில்லை..!!
10 April 2013
அவளின் அனுமதியன்றி யாரும் படிக்க வேண்டாம்...!!!

கனவுகளில் அவள் உலகம்,
கற்பனையில் எனது கடிதம்,
வார்த்தை இழந்த மௌனம்,
வரிகள் மறந்த நினைவு,
பணிய மறுத்த பேனா,
பதறி துடித்த காகிதம்..!!
அவளை எழுத நான் துணிந்த போது
இதயம் குதிப்பதை தான் உணர்ந்தேன்.!!
Labels:
காதல் கவிதைகள்
08 April 2013
மதுவுக்குள் ஒளிந்துள்ள ஒரு மாமனிதன்...!!

காலையில் மனிதன் அவன்,
மாலையில் மதுவுக்குள் மயங்கி
பொய் பேச தெரியாத
மகான் ஆகி விடுகிறான்.
சொல்ல முடியாத உண்மைகள்
அவன் மூளையின் அனுமதியின்றி
Labels:
சமுதாய கவிதைகள்
05 April 2013
தோல்வி நிலையென நினைத்தால்...!!!

தோல்வி என்பது,
போட்டியின் முடிவல்ல
வெற்றியின் தொடக்கம்..!!
தோல்வி என்பது,
ஒன்றும் தெரியாது என்பதல்ல,
புதிதாக தெரிந்துகொள்வதின் நுட்பம்..!!!
01 April 2013
காதல் செய்யும் புதுவித வன்முறை...!!!
.jpg)
காதலை மறைப்பது பாவம்,
சொல்லாமல் கொல்வது அநியாயம்,
இது மகரந்த பூவின் வாசம்,
என் இதயம் அழிக்கும் சுவாசம்...!!
ஒரு புதுவித செய்முறையே,
காற்றை நிறுத்தினேன்
அதன் மூச்சை அடக்கினேன்
உயிர் விட்டது காற்றல்லவா..!!!
Subscribe to:
Posts (Atom)