
11 October 2013
07 October 2013
சிறுக்கி மகளுடன் காதல்...!!!
நாலு பக்க நெஞ்சுக்குள்ள
காலு வைக்கும் மயிலே,
நானும் கொஞ்சம் பாவமடி
காதல ஆழமா இறக்கி வை...!!
போனாப் போகுதுன்னு
பொறம்போக்கா நான் திரிஞ்சேன்,
பொட்டப் புள்ள உன்னப் பாத்து
பொசுக்குனு கிறங்கிப் புட்டேன்..!!
Labels:
காதல் கவிதைகள்
04 October 2013
மண்வாசனை...!!!

மணக்கும் மண்குடிசைகள்,
ஒழுகா ஓட்டு வீடுகள்,
ஒதுங்கி நிற்கும்
ஒற்றை பெரிய ஆலமரம்,
ஒய்யார அய்யனார் சாமி என
மொத்தமும் சுத்தமாய்
மண்வாசனையுடன் கிராமம்..!!
01 October 2013
இது ஹைக்கூ கவிதைகளா...???
.jpg)
இரக்கமில்லாமல் நீ எத்தனை முறை
ஒப்பனை செய்து கொண்டாலும்,
பாழாய்ப் போன கண்ணாடிக்கு
பொறாமையும்,ஏமாற்றமுமே மிச்சம்..!!
Labels:
காதல் கவிதைகள்
30 September 2013
தோற்கப் பழகுவோம்...!!!

தோல்வி தரும் சோகத்தினை
தோளில் சுமந்து நிற்கையில்,
வேட்கையுடன் வெற்றிக்கனி பறிக்க
விடாமுயற்சியுடன் வா நண்பா
தோற்கப் பழகுவோம்..!!
28 September 2013
தோற்றுப் போன இதயம்...!!!

காதல் முறிவென்பது,
இணைந்து காதல் செய்த
இரு இதயங்களில்,
ஒரு இதயம் செய்யும்
முட்டாள்தனமான
காதல் கருக்கலைப்பு..!!
25 September 2013
நல்லதோர் காதல் செய்தேன்....!!!

உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து
மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து
நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து
அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!!
Labels:
காதல் கவிதைகள்
24 September 2013
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!

அமைதியான கிராமம்
அறிவற்ற மக்கள்,
கலப்படமில்லா காற்று,
கர்வம் நிறைந்த மனது,
இறைவன் வாழும் இயற்கை
இதயமற்ற மனிதன்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
21 September 2013
ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!

தோலும் சதையும் சூடி
காற்று நிரப்பிய வெற்று உடம்பை
உப்பில்லாத உணர்ச்சி பூட்டி
திரையிட்டு மூடிக் கொண்டால்
ஐம்புலன்களும் அடங்குமென
எப்படி ஒப்புக் கொள்வது..??
Labels:
சமுதாய கவிதைகள்
19 September 2013
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!

குடும்பம் நாசமாய்ப் போனாலும்,
குடித்துக் குடித்து
நாட்டை வாழ வைக்கும்
நல்ல குடிமகன்களே...!!
சாகப் போவது தெரிந்தும்
சாயந்திர நேரம் வந்ததும்
சரக்கடிக்க துடிக்கும்
சரித்திர நாயகர்களே..!!
Labels:
சமுதாய கவிதைகள்
16 September 2013
மகனுக்கு ஒப்பாரி....!!!

வானம் வறண்டிருச்சு,
வம்சம் சரிஞ்சுடுச்சு,
வடக்கு நோக்கி போனவனே
வராம எங்க போன..??
Labels:
வாழ்க்கை கவிதைகள்
14 September 2013
வேலை தேடும் படலம்...!!!

வேலை வேலை வேலை
வேலை தேடுவதே ஒரு வேலை...!!
வேலை தேடி
நான் அலைஞ்ச
நாட்களெல்லாம்
நாசமாக போய்விடுமோ...??
Labels:
வாழ்க்கை கவிதைகள்
11 September 2013
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!
.jpg)
அமரகவியே சொல்,
முறுக்கு மீசையும்,
முண்டாசு தலையும்,
மிடுக்கும் தோற்றமும்,
மிரட்டும் பார்வையும்,
மின்னல் நடையும்,
மீள்பதிவுப் பேச்சும்,
மீண்டும் நாங்கள்
காண கண் கூடுமோ...???
10 September 2013
50 கிலோ தாஜ்மஹால்....!!!

அந்தப்புர அழகிகளும்
அவனிகை விலக்கி
அதிசயமாய் அசந்து நிற்க,
அத்தனை அம்சங்களும்
அதிகபட்சம் அவள்கொண்டு
அன்னமாய் நடந்து
அலட்டிக் கொண்டு போனாள்..!!!
Labels:
காதல் கவிதைகள்
09 September 2013
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!

கடவுளைக் கூவி விற்கிறான்
கூறுகெட்ட மனிதன்,
எடையிட்டு ஏலமிடுகிறான்
ஏட்டறிவைத் தொலைத்தவன்,
கையால் செய்த ஒன்றை
கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
06 September 2013
ஆணியே புடுங்க வேண்டாம்...!!

அன்றாடங் காய்ச்சிகளின்
அடிவயிற்றில் அடித்து
அகமகிழ்ச்சி அடையும்
அரைகுறை பாடம் கற்ற
அரசியல்வாதிகளே..!!
Labels:
சமுதாய கவிதைகள்
05 September 2013
பெண்ணே, நாய்கள் ஜாக்கிரதை...!!

பெண்ணே,
அருமையான உன் அறிவால்
பெருமை பெற்று வலம் வருகையில்
சிறுமை என எண்ணி நகைக்கும்
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!!
Labels:
சமுதாய கவிதைகள்
02 September 2013
வானம் பார்த்த பூமி...!!!
.jpg)
கந்தக பூமி
காய்ந்த நிலம்
கஞ்சிக்கு வழியின்றி
கருவாடாய் வாடும் முகம்..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
31 August 2013
கண்ணீர் அஞ்சலி...!!!

கனக்கிறது இதயம்,
கொதிக்கிறது இரத்தம்,
உதவி என்றதும் உதறி விட்டு
போகிற போக்கில்
போகும் மாமனிதர்களை
பார்க்கும் போதெல்லாம்
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!
Labels:
சமுதாய கவிதைகள்
29 August 2013
என் பேருந்துப் பயணத்தில்...!!!
.jpg)
விண்வெளி ஓடத்தில் பறப்பதாய்
பகல்நேரக் கனவு,
நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!!
கூடுவிட்டு கூடு பாய
இடை தடையேதும் இல்லை,
வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
27 August 2013
செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!

இருப்பதை இழந்து
அடிப்பவன் புகழ் பாடி
அடிமையாய் வாழ்பவனுக்கு,
ஆள்பவனின் பரிசு
அடியும் உதையும் மட்டுமே..!!!
Labels:
வாழ்க்கை கவிதைகள்
26 August 2013
ஊர்ல இருந்து அப்பா கடுதாசி...!!!

வெளியூர்ல இருக்குற மகனுக்கு
ஊர்ல இருந்து அப்பா கடுதாசி,
அன்பு மகனே,
உண்மைய சொல்றேன்
நாங்க இங்க நல்லா இல்ல..
எங்கள நினச்சு நீயும்
இளச்சு ஓடா போயிருப்பனு
நல்லாவே தெரியும்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
24 August 2013
கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!

அனுமதி கிடைத்தால்
அவள் கடித்து துப்பும்
ஒவ்வொரு நகங்களில் இருந்தும்
ஒரு அழகி செய்வேன்....!!!!
Labels:
காதல் கவிதைகள்
21 August 2013
பார்வைகள் பலவிதம்...!!!

கண்கள் ஒன்றென்றாலும்
பார்க்கும் பார்வைகள் பலவிதம்..!!
புரிய மறுத்து பிரிந்து சென்று,
பிரிந்த பின் புரிந்து வந்து,
ஒரே அலைவரிசையில்
ஒன்றிணைவது காதல் பார்வை..!!
Labels:
வாழ்க்கை கவிதைகள்
20 August 2013
அண்ணன் என்னடா, தம்பி என்னடா..??

வேறு கிரகம் தேடி
அலைந்து கொண்டிருக்கும்
மனிதா..??
கிரகம் பிடித்தவன் போல்
கிறுக்கு கொண்டு அலையாமல்
இறுதி வரை உடன் வரும் உறவை
கொஞ்சம் தேடிக்கொள்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
19 August 2013
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!!

இணையம் தேடலில்
இடறி விழுந்த
இதயம் ஒன்று
இதயம் விட்டு போக மறுக்கிறது..!!!
Labels:
காதல் கவிதைகள்
17 August 2013
காதலிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை....!!!

அர்த்தராத்திரி ,
அதீத நிலவொளி,
கண்ணை விரட்டும் தூக்கம்,
இரவுக்கு அடங்காத கனவு,
அமளி துமளி ஏதுமின்றி
அனிச்சையாய் கனவில் வந்தாள்..!!
Labels:
காதல் கவிதைகள்
16 August 2013
செத்தால் மட்டும் தான் சுடுகாடா....????

இசைநிறை வரியென
இதய வெற்றிடம் நீ சூழ்ந்தால்,
இயல்பு தன்மை நான் மறந்து
இன்னிசை பாடி இமை திறப்பேன்...!!
Labels:
காதல் கவிதைகள்
14 August 2013
அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!!

திருமண சந்தையில்
துண்டு போட்டு பேரம் பேசி,
தங்கத்திற்கும் பணத்திற்கும்
ஒப்பந்த முறையில் சாசனம் எழுதி,
மணமகளை இறக்குமதி செய்கின்றனர்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
13 August 2013
கவிதைக்கும், தலைப்புக்கும் தொடர்பில்லை...!!
.jpg)
அடுத்தடுத்து என்ன நடக்குமென
அடுத்தவனுக்கு தெரிந்து விட்டால்
அடுத்து நடப்பதில் பலனில்லை...!!
சத்தியம் செய்த உண்மைகளெல்லாம்,
சத்தியமாய் நிலைத்து இருக்குமாயின்
சத்தியம் கூட உலக அதிசயமே..!!
12 August 2013
பிணம் எரிக்கும் நாளைய பிணங்கள்..!!

மயானம் நோக்கி வருகிறான்
மரித்துப் போன மனிதன்,
அமைதியை விரும்பாதவனுக்கு
அந்த மயான அமைதி புதிது தான்..!!
10 August 2013
கேவலமான தற்கொலைகள்...!!!
.jpg)
யாருக்கும் கிடைத்திடாத
மனிதப்பிறவியை மாய்த்து,
யாருக்காகவோ தற்கொலை செய்யும்
கேவலமான பிறவிகளின்
ஆன்மா பார்த்து கேட்கிறேன்,
Labels:
சமுதாய கவிதைகள்
08 August 2013
ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!!

பொத்திப் பொத்தி வளர்த்த மகள்,
பொங்கும் பாசம் வைத்த மகள்,
தாயைப் போல் கண்ட மகள்,
தவிக்க விட்டு போன மகள்..!!!
Labels:
வாழ்க்கை கவிதைகள்
07 August 2013
தீண்டத்தகாத கவிதை வரிகள்...!!!

தீயினால் சுட்டதோர் புண்ணை விட
தீண்டாமையினால் சுட்ட புண்
காலத்தினும் ஆறாமல்
நெஞ்சை வருடும் வடுக்களாகவே
வீதியில் அலைகிறது..!!
Labels:
சமுதாய கவிதைகள்
06 August 2013
கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!!

குழலூதும் குரலில்
குரல்வளை சுருக்கி,
தெவிட்டாத தேன் பேச்சில்
அன்பாய் அவள் என்னை அழைத்தால்
கொஞ்சம் இஷ்டம்...!!!
Labels:
காதல் கவிதைகள்
05 August 2013
சுனாமியில் தப்பி பிழைத்தவன்..!!!!

திடீரென இதயம் நின்று விட்டது
யார் காரணமோ..??
இதயம் நின்ற காரணம் அறிந்தால்
காதல் என்ன செய்யுமோ..??
03 August 2013
வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!

வாலிப வயதில் இளமை நாணேற்றும்,
முட்டாள் மூளையின் தூண்டல்
நெருப்பையும் அள்ள வைக்கும்,
நினைப்பவை எல்லாம்
நிகழ்த்த துடிக்கும்,
நிகழ கூடாத எல்லாம்
நினைக்கவும் வைக்கும்,
இத்தனை இருந்தும் வாலிபம்
அர்த்தமில்லா கேள்விகுறி தான்..??
Labels:
வாழ்க்கை கவிதைகள்
02 August 2013
நெற்றிக்கண் திறப்பினும் பசி பசியே...!!!

பச்சை பிள்ளையின் அழுகுரலுக்கும்,
பரிதவிக்கும் தாயின் தவிப்பிற்கும்,
பஞ்சம் போக்க எவனும் வருவானோ
பசி நீங்க பழைய சோறு தருவானோ..??
Labels:
சமுதாய கவிதைகள்
01 August 2013
எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

ஆண்:
முதலிலும் முடிவிலும் உன்னை கேட்பேனே,
இரவிலும் பகலிலும் உன்னை நினைப்பேனே,
என் கைகள் பற்றி கொள்வாயா...??
என் கண்ணில் தினம் வசிப்பாயா..??
வாசல் எதிர்பார்த்தே மெலிந்தேன் நான்..!!
Labels:
காதல் கவிதைகள்
30 July 2013
இப்பொழுது சந்தோசமா உனக்கு...???
.jpg)
இப்பொழுது சந்தோசமா உனக்கு...???
எங்கேயோ பாதை தேடி
என் வழியில் நான் சென்றேன்,
விடாப்பிடியாய் உள் இழுத்து
காதல் முள் தைக்க
என் நெஞ்சை கிழித்தாயே...!!!
29 July 2013
சர்வாதிகாரக் குழந்தைகள்......!!!

குழந்தைகள்,
தேவதைகளின் அனுமதியின்றி
பூமியில் தவழும்
விளம்பர தூதர்கள்...!!
குழந்தைகள்,
கடவுள்களின் குணத்தை
தெரிந்தே திருடி வந்த
அழகு நகல்கள்..!!
Labels:
அன்பு கவிதைகள்
27 July 2013
கடவுள் பாதி,மிருகம் பாதி...!!!!
.jpg)
கடவுளின் நினைப்பு
நாம் படைத்த மிருகமே மனிதன்,
ஆனால் தெளிந்த உண்மை
மனித மிருகம் படைத்த
ஒன்றே கடவுள்..!!
26 July 2013
போதும்டா சாமி இந்த காதல்...????

போடி போடி எங்கேயோ போடி,
என் உயிரின் மிச்சம் அறுத்து போடி,
தூரம் சென்று மறைந்து போடி,
உன் துகில் மூடித் தொலைந்து போடி....!!!
24 July 2013
அன்புள்ள தங்கைக்கு....!!!!

தங்கை,
வார்த்தைகளிலோ,
பாச மொழிகளிலோ,
அடக்கிவிட முடியாத தேவதை...!!
Labels:
அன்பு கவிதைகள்
22 July 2013
என்ன பொண்ணுடா இவள்....!!!!

உன்னை பார்த்த நொடியில்
என்னுள் கொதிக்கும் வினா,
நானிருப்பது பூமியிலா இல்லை
பூக்களின் தெருவிலா..??
Labels:
காதல் கவிதைகள்
20 July 2013
கூட இருந்தே குழி பறிக்கும் நட்பு...!!!

நட்பு இன்னொரு நட்புக்கு
தீங்கு செய்யும் போது கூட
மன்னிக்கப்படுகிறது,
அதுவே,
துரோகம் செய்யும் போது
உயிர் எடுக்கவும் துணிகிறது..!!
Labels:
நட்பு கவிதைகள்
19 July 2013
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!
.jpg)
எங்கேயோ வேடிக்கை பார்க்கிறான்,
நம்மை பூமிக்கு அனுப்பி வைத்த
இறைவன்..!!!
18 July 2013
என்னைப்பற்றி நானே.....!!!!
.jpg)
இது தான் நான் என்று
சொல்ல முடியவில்லை,
இப்படி தான் நான் எனவும்
விளக்க முடியவில்லை..!!
17 July 2013
நினைவெல்லாம் நீ தானே...!!!
.jpg)
எங்கே தான் போனாயோ சொல்லாமலே,
நீயின்றி நானும் இங்கே இல்லாமலே,
என்ன தான் செய்வதோ புரியவில்லை,
ஏனோ தவிக்கிறேன்
புரியாமல் இருக்கிறேன்..!!!
Labels:
காதல் கவிதைகள்
16 July 2013
நிறமில்லாத வண்ணங்கள்...!!!

கண்கள் இருந்தும் காட்சிகள் இல்லை,
எங்கள் உலகில் வெளிச்சமே தொல்லை,
இருந்தும் பார்க்கிறோம்,
இறைவனிடம் கேட்கிறோம்,
அரிதாய் அமைந்த வாழ்வை
இனிதாய் மாற்ற வேண்டுகிறோம்...!!!
Labels:
சமுதாய கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)